*’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!*

*’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது.

படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள்.

நிஜத்திலும் ருத்ரா ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இதற்கு முன்பு பணிபுரிந்தார். மேலும், FIR, கட்டா குஸ்தி ஆகிய படங்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளையும் ருத்ரா மேற்கொண்டார்.

கதாநாயகனாக தன்னுடைய அறிமுகம் பற்றி அவர் பகிர்ந்து கொண்டதாவது, “கேமராவுக்கு பின்னாலும் முன்னாலும் பணிபுரிவது சவாலானது. ஆனால், எனக்கு நல்லபடியாக பணி செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது”.

நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டதாவது, ” இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளது. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்து உடனே ருத்ராவை நடிக்க வைத்தேன். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம். நடிகர் சூர்யா சார் தயாரிப்பில் எப்படி கார்த்தி சாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அப்படி இனிவரும் காலத்தில் ருத்ரா நடிக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க இருக்கிறேன். நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால் என் தம்பிக்கு முதல் படத்திலேயே முத்த காட்சி அமைந்து” என்றார்.

இதில் கதாநாயகியாக நடிகை மிதிலா பால்கர் நடிக்கிறார்.

250-க்கும் மேற்பட்ட கமர்ஷியல் வீடியோ மற்றும் ஃபிலிம்மேக்கர் ராஜீவ் மேனனிடம் பல ஃபீச்சர் படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். “விளம்பரங்களில் 30 செகண்ட்டில் பார்வையாளர்களைக் என்கேஜ் செய்ய வேண்டும். ஆனால், சினிமாவில் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களைக் கட்டிப் போட வேண்டும் என்பது சவால். அதை சிறப்பாக செய்திருக்கிறோம்” என்றார்.

இந்தப் படத்தின் டைட்டில் ஐகானிக் பாடலான ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் அதன் கிளிம்ப்ஸ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

*தொழில்நுட்ப குழு:*

ஒளிப்பதிவு: ஹரிஷ் (டிமாண்டி காலனி படப்புகழ்)
படத்தொகுப்பு: R.C. பிரணவ்,
இசை: ஜென் மார்ட்டின் (டாடா, ப்ளடி பெக்கர் படப்புகழ்)

kollywood newstamil cinema newstamil film newsVishnu Vishal
Comments (0)
Add Comment