தாவெக தலைவர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரோஜா விருது விழாவில் சிறந்த நடிகர் சிறப்பு பரிசினை விஜய்க்கு வழங்கினேன் அவர் வாங்கிய முதல் விருது என்னுடைய ரோஜா விருது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அந்த விருதின மகிழ்ச்சியோடு பெற்றார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய பி ஆர் ஓ பி டி செல்வகுமார்.
தம்பி விஜய் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய புகைப்படத்தை முதன்முதலில் அட்டை படத்தில் வெளியிட்டதும் நான் தன். தம்பி விஜய் படப்பிடிப்பிலும் சரி மற்ற இடங்களிலும் சரி எங்கு பார்த்தாலும் என்னுடைய கைகளை பற்றி பாசத்தையும் அன்பையும் பரிமாறுவார். இந்த அசுர வளர்ச்சிக்கு விஜயின் திறமை அவருடைய அப்பாவின் உழைப்பு. தன் பையனை நாட்டின் முதல்வராக்க வேண்டும் என்பதற்காக சிக்கனமாக செலவு செய்து விஜயை இந்த அளவுக்கு உயர்த்தியவர் டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர். இன்று அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கும் விஜய் வெற்றி பெறுவாரா என்பது எதிர்காலம் தான் கணிக்கும். மீண்டும் ஒருமுறை அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் துரை ராமச்சந்திரன் ,;ரோஜா தமிழ் டிவி ,ஆசிரியர்.