ஒரு படம் பார்க்க உட்காரும்போது இது கடமைக்காக எடுத்த படம் இல்லை இல்லை, கஷ்டப்பட்டு எடுத்த படம் என்பது தெரிந்துவிடும். அந்த விதத்தில் ஓஹோ எந்தன் பேபி என்கிற திரைப்படத்தை பார்க்கத தொடங்கியதும் சலிப்பு தட்டாமல் ஆர்வத்துடன் பார்க்கும்படி இருந்தது. அந்தப் படத்தின் கதை இதுதான் .ஒரு இளைஞன் சினிமாவில் இயக்குனராக வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஒரு கதாநாயகனிடம் கதை சொல்லப் போகிறான். அந்தக் கதையை கேட்ட கதாநாயகன் அசந்து போய் இரண்டாம் பாகம் என்ன என்று கேட்கும் பொழுது அந்த உதவி இயக்குனர், திரு திரு என்று முழிக்கிறார். கதாநாயகன் என்ன என்று கேட்கும் போது ‘அது எனது சொந்தக்கதை சார்’ என்கிறார்.பிரேக்கப் ஆகுவதுடன் இடைவேளை. அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை கதாநாயகன் சொல்லுகிறார். அதன்படி நடக்கிறது .முடிவு என்ன என்பது ரசிக்கும்படியாக உள்ளது. சினிமா கதைகளை பார்த்திருக்கிறோம். சினிமாக்காரன் கதை படமாகும் போது எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா அறிமுகமாகி இருக்கிறார்.பையன் துரு துருன்னு செம க்யூட்டா இருக்கான்,ருத்ரா.தான் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் .அதற்காக உழைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த படத்தில், மிக அருமையாக நடித்திருக்கிறார் . அவருடைய மைனஸ் பாயிண்ட்டை கூட பிளஸ் பாயிண்ட் ஆக்கி தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் காட்சியில் பதற்றத்துடன் கதாநாயகியை காப்பாற்ற போய் அவள்,இவரை காப்பாற்றி வரும் அந்த காட்சியில் இரண்டு பேருமே பதற்றத்துடனும் படபடப்புடனும் ஆர்வத்துடனும் மிக அழகாக வித்யாசமாக நடித்திருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருப்பதற்கு நாம் பாராட்டலாம் . கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு புது நல் வரவு -ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
கதாநாயகி இந்த காலத்து பெண்களைப் போல எதார்த்தமாக இருக்கிறார்.நடை உடை பாவணையும் பேச்சும் மால்களில் பார்க்கும் மார்டன் கேர்ள் போல் இருக்கிறது.
என்ன, படத்தில் இயக்குனராக மிஷ்கின் வருகிறார். சொல்லவா வேண்டும்?! சொந்த கேரக்டரையே பட கேரக்டராக இருக்கும் பொழுது அசத்த சொல்லித் தர வேண்டுமா என்ன? மிஷ்கின் அருமையான பெர்பார்மன்ஸ் .
இதிலே விஷ்ணு விஷால் கதாநாயகனாகவே ஒரு சில காட்சிகளில் வருகிறார். அந்த கெட்டப்பில் மிக அருமையாக இருக்கிறார் நன்றாகவே நடித்திருக்கிறார். அண்ணன் தம்பி இருவரும் சக்க போடு போட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி காமெடி என்ற பெயரில் கத்து கத்து என்று கத்துகிறார். அவருடைய நடிப்பு சகிக்கவில்லை. மாற்றிக்கொள்ள வேண்டும். விஷ்ணு விஷாலின் மேனேஜராக வந்து கொடுமை படுத்துகிறார்.
இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் .முதல் கதாநாயகி,கதாநாயகனை காதலித்து விட்டு அவனிடமே என்னுடைய புது காதலன் என்று இன்னொரு பெண்ணை காட்டி முதல் காதலை பிரேக் அப் செய்கிறார். வித்யாசமான காட்சி. யதார்த்தம் இதுதான், இந்த காலத்தில். அந்த முதல் கதாநாயகி ரொம்பவும் அழகாக இருக்கிறார், செம் மாடர்ன் பிரமாதம் .
மணிப்பூரில் கதாநாயகி மருத்துவ படிப்புக்கு செல்வதும் அவரை கதாநாயகன் பார்க்கச் செல்வதும் அங்கு வேறொருவருடன் கதாநாயகி லிவிங் டுகெதராக இருப்பதாக சொன்னதை பார்த்துவிட்டு கலங்குவது போன்ற காட்சிகள் இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.
கருணாகரன்,பாலாஜி சக்திவேல் இருவரும் பண்பட்ட நடிப்பு.
இசையாம்பாளர் புதியவர் என்றாலும் படத்தோடு ஒன்றும்படி தனது பணியை அருமையாக ரசித்து செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளரின் பங்கும் சிறப்பாக உள்ளது.
காதல் மட்டும் வாழ்க்கை இல்லை .அதற்கு ஒரு வேலை- சம்பாத்தியம் தேவை என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். இது படம் பார்க்கும் இளைஞர்கள் மனதில் தைக்கும்.
மொத்தத்தில் இந்த படம் இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் காதல் எப்படி என்பதை எதார்த்தமாக மிகை இல்லாமல் ரொமாண்டிக்காக சொன்ன டைரக்டருக்கு நல்லா எதிர்காலம் இருக்கிறது. சபாஷ். ரவிச்சந்திரன் பருவகாலம், முரளி இதயம், அஜித் காதல் கோட்டை போன்ற வரிசையில் இது ஒருபடம்.
பத்துக்கு நான்கு புள்ளி ஐந்து மதிப்பெண்கள் இந்தப் படத்திற்கு தாராளமாக தரலாம்.
4.5/10…⭐⭐⭐⭐
ஓஹோ எந்தன் பேபி – நடிகர், நடிகைகள்
*நடிகர்கள்:* ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர்.
*தொழில்நுட்பக் குழு:*
வழங்குபவர்கள்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ்,
இயக்குநர்: கிருஷ்ணகுமார் ராமகுமார்,
தயாரிப்பாளர்கள்: ராகுல் மற்றும் விஷ்ணு விஷால்,
இணை தயாரிப்பாளர்கள்: கே.வி.துரை மற்றும் ஜாவித்,
இணை தயாரிப்பு: குட் ஷோ,
இசை: ஜென் மார்ட்டின்,
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்,
எடிட்டர்: ஆர்.சி. பிரணவ்,
கலை இயக்குநர்: ராஜேஷ்,
ஸ்டண்ட் மாஸ்டர்: ரக்கர் ராம்,
நடன இயக்குநர்கள்: பாபி, சதீஷ் கிருஷ்ணன்,
கதை: முகேஷ் மஞ்சுநாத்,
ஆடை வடிவமைப்பு: ருச்சி முனோத்,
காஸ்ட்யூமர்: ரவி,
ஒப்பனை: சக்திவேல்,
பாடல் வரிகள்: அஹிக் ஏஆர், கார்த்திக் நேதா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்,
ஒலி பொறியாளர்: தீலபன், ஸ்ரீராம் (சீட் ஸ்டுடியோஸ்),
VFX: Resol FX,
DI: மேங்கோ போஸ்ட்,
வண்ணம்: கே. அருண் சங்கமேஸ்வர்,
ஸ்டில்ஸ்: நரேன்,
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் : வி.எஸ்.அனந்தகிருஷ்ணன்,
பப்ளிசிட்டி டிசைனர்: கோபி பிரசன்னா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்.