அர்ஜுன் தாஸ் சிகரம் தொடுவாரா

தமிழ் சினிமாவில் குறிஞ்சி மலர் போல் எப்போதாவது ஒரு நடிக்கக்கூடிய நடிகர் கிடைப்பார். ரகுவரன், நாசர்,பாலா சிங் இப்படி பாத்திரத்தை உள்வாங்கி அந்த பாத்திரமாகவே மாறி நடித்து பெயர் பெற்றார்கள்.அந்த வரிசையில் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. 

 

படத்துக்கு படம் வித்தியாசமான பாத்திரங்களில் தோன்றி அசத்தி வருகிறார், அர்ஜுன் தாஸ்.

எம் ஆர் ராதா போல் கரகரா குரலில் மிரட்டுகிறார், அர்ஜுன் தாஸ். ஆரம்பத்தில் ரஜினி பேசுகின்ற தமிழை எல்லோரும் கேலி செய்தார்கள் . நாளடைவில் அதை ரசித்து அவரை உச்சத்துக்கு கொண்டு போனார்கள். அதுபோல அர்ஜுன் தாஸையும் அவருடைய குரலையும் எல்லோரும் ரசித்து அவருக்கும் ஆதரவளிப்பார்கள். அர்ஜுன் தாஸ் இளைஞராக இருப்பதால் அவருடைய கடின உழைப்பும் தான் எடுத்துக் கண்ட வேலையில் அக்கறையும் கொண்டு செய்வதால் அவர் நிச்சயம் திரை உலகில் பிரகாசிப்பார்.

சமீபத்தில் வெளிவந்த பாம் என்கிற திரைப்படத்தில் காளி வெங்கட்டும் இவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகன் வேடத்திலும் இரண்டு ஊர்களுக்குள் ஏற்படும் ஜாதி பிரச்சனையே போக்கும் ஒரு இளைஞனாக அசத்தியிருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் உயரத்தை தொடுவது உறுதி; சிகரத்தை தொடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments (0)
Add Comment