காடுவெட்டி குருவின் கதையை மயமாக வைத்து எடுக்கப்பட்ட படம்ஒ, படையாண்ட மாவீரா. வா கௌதமன் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 2005 ஆண்டுகள் காடுவெட்டி என்கிற ஊரைச் சார்ந்த குரு செய்த வீரச் செயல்களை படங்களே ஆங்காங்கே காட்டி விறுவிறுப்ப ஊட்டுகிறார், கௌதமன்.
காடுவெட்டி குரு என்றாலே ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டங்களில் மக்கள் பயம் கொண்டு ஓடுவார்கள். அப்படிப்பட்ட மாவீரனை ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது கைது செய்து ஜெயிலில் போட்டு அவரது புகழுக்கும் சமூக சேவைகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தினார்.
அப்படிப்பட்ட குருவின் உண்மை முகத்தை இந்த படத்தை தெள்ளத் தெளிவாக டைரக்டர் வா கௌதமன் ஒவ்வொரு காட்சியிலும் காட்டுகிறார்.
அம்பேத்கார் சிலை வைப்பது ஏழைகளுக்கு உதவுவது போன்ற குருவின் உண்மை பண்புகளை வெளிப்படுத்த கௌதமன் தவறவில்லை.
அவரே காடுவெட்டி குருவாக நடித்திருப்பதால் அந்த கதாநாயகன் வேடம் மிக சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கௌதமனைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் குரு பாத்திரம் இந்த அளவுக்கு ஈடுபட்டிருக்காது.
தந்தையை வெட்டியவனின் தலையை பல ஆண்டுகள் கழித்து சீவி எரியும் அந்த காட்சி குலை நடுங்க வைக்கிறது.
அதேபோல் இறுதிக் காட்சியில நெய்வேலி நிலக்கரி சு,ரங்க விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை எடுப்பதை எதிர்த்து குரு போராடி வெற்றி பெற்ற அந்த உண்மைச் சம்பவத்தை மிகச் சிறப்பாக விறுவிறுப்பாக கௌதமன் படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
வன்னியர் சங்கத் தலைவராக அந்த இன மக்களின் காவலனாக இருந்த குருவின் வீர வரலாறு மிக அழகாக படமாக்கி ஒரு ஆவணப்படுத்திய கௌதமன் உண்மையிலேயே பாராட்டு கூறியவர். வன்னிய மக்கள் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.