பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – மனம் திறந்த வைரமுத்து

*பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – மனம் திறந்த வைரமுத்து*

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தும்போது பேசியதாவது.

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி பணிக்கு செல்வதினால் இல்லத்தை கவனிக்கவும், பிள்ளைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவும், முதியவர்களை பேணவும் ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மேல் நாடுகளில் ஆட்கள் இல்லாமல் ரோபோக்களை பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை வந்து கொண்டிருக்கிறது. நம்மூரில் நல்ல பணியாளர்கள் தொண்டு செய்கிறவர்கள் நமக்கு கிடைக்கிறார்கள்.எனவே உங்கள் இல்லத்துக்கு தேவையான பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிற தொண்டாளர்கள் எல்லோரையுமே உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறது இந்த நிறுவனம். இது போன்ற நிறுவனத்தின் சேவை இல்லாமல் இந்த சமூகம் இயங்காது. இந்த நிறுவனம் தினந்தோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவைப்படுகிறது. நிறுவனம் வளர வேண்டும்.வாழ வேண்டும்.உங்கள் தொண்டு தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

 

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை காலம் அவர்களை அந்த கட்டாயத்திற்கு தள்ளுகிறது. தன்னைப் பார்த்துக் கொள்ளவும் தன் பணிகளை பார்த்துக் கொள்ளவும் தன் நிறுவனத்தை பார்த்துக் கொள்ளவும் மனிதர்கள் நேரமில்லாமல் தவிக்கிற போது தாய் தந்தையர்களும் பல இடங்களில் கைவிடப்படுகிறார்கள். சமூகம் அந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டு விட்டது. அவர்களைப் பார்த்துக் கொள்வதும் இது போன்ற நிறுவனத்தின் தேவை. மகன் செய்ய வேண்டியதையும் மகள் செய்ய வேண்டியதையும் இதுபோன்ற நிறுவனங்கள் செய்கிறது வாழ்த்துக்கள் என்று பேசினார்.

ஓய்வு பெற்ற டிஜிபி R.சேகர் IPS இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார்.

 

சிறப்பு விருந்தினர்களாக

திரைப்பட இயக்குனர்,நடிகர் இ.வி.கணேஷ்பாபு,

திரைப்பட இயக்குனர் சாட்டை அன்பழகன், கவிஞர் சிவராஜ், இசையமைப்பாளர் ரமேஷ்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

 

நிறுவனத்தின் சென்னை அலுவலக இயக்குனர் கவிஞர் இளங்கதிர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Chennaihome careKodambakkamvairamuthu
Comments (0)
Add Comment