*காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S,  இணையும் #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் — சர்ஜிகல் ஸ்டிரைக் போல வெடித்தது!காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 அகண்டா 2: தாண்டவம்  டிரெய்லர் வெளியானது !!*

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக நாடு முழுவதும் மிக தீவிரமான மற்றும் பரவலான புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ராம் ஆசம்டா மற்றும் கோபி ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று பெங்களூரில் நடைபெற்ற விழாவில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முன்னிலையில்,  படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் டிரெய்லர்கள் வெளியிடப்பட்டது.

டிரெய்லர் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. இந்தியாவின் ஆன்மீக அடித்தளத்தை அழிக்க, நாட்டின் உள்ளும் வெளியும் செயல்படும் தீயசக்திகள் ஒன்று சேர்கின்றன. இவர்களின் நோக்கம் — சனாதன  ஹைந்தவ தர்மத்தை முழுமையாக அழித்து, தேசத்தை குழப்பமும் பயமும் நிறைந்த நிலைக்கு தள்ளுவது.

ஆனால் நம்பிக்கை குலையும் அந்த தருணத்தில் — தெய்வீக தீப்பொறி போல எழும் சக்தி… தான் அகண்டா!புராண வலிமையும் தேசபக்தியும் கலந்த ஒரு அதீத சக்தியாக, தீயதை சுட்டெரிக்க அகண்டா  எழுகின்றார்.

இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  இந்த முறை மிக விரிவான, எல்லைகளைத் தாண்டும் தொலைநோக்கு பார்வையில் படத்தை உருவாக்கியுள்ளார். ஆன்மீக ஆற்றலும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும், பெரும் உலகை அகண்டா 2 கட்டியெழுப்புகிறது. கும்பமேளா காட்சி டிரெய்லரின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் கோபம் — தெய்வீகத்தின் வடிவம்.அவரது சக்தி —  நிறுத்த முடியாத புயல்.இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அகண்டா அவதாரம் திரையை  முழுமையாக ஆட்சி செய்கிறது. அவரது நடை, பார்வை, வசனங்கள்,  தெய்வீக பாதுகாவலனின் உருவத்தை நினைவூட்டுகின்றன.

ஆதி பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின்  உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.

படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே  — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும்  உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய  அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும்,  A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.

தேசபக்தி, ஆன்மீக வலிமை மற்றும் மாஸ் எலிவேஷன் — இந்த மூன்றையும் இணைத்து, அகண்டா 2 டிரெய்லர் உண்மையான NBK ஸ்டைல், சர்ஜிகல் ஸ்டிரைக் போல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சானதான ஹைந்தவ தர்மம் மையமாக இருப்பது, முழு இந்திய ரசிகர்களுக்கும் பெரும் ஈர்ப்பாக அமைந்துள்ளது.

*அகண்டா 2 – தாண்டவம்  திரைப்படம் வரும்  டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.*

*நடிப்பு :*

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

*தொழில்நுட்பக் குழு :*

எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

Akhanda2kollywood newsNandamuri Balakrishnatamil cinema newstamil film news
Comments (0)
Add Comment