*தமிழகத்தின் வளர்ச்சிக்கு வாஜ்பாய், மோடி ஆட்சியே காரணம்*

*காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட 10 மடங்கு அதிக நிதியை மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது*

*காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட 10 மடங்கு அதிக நிதியை மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது*

மத்திய பட்ஜெட், 100 வேலை திட்டத்தில் மாற்றம், அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக தலைமையிலான இண்டி கூட்டணி அறிவித்துள்ளன.

 

இதற்காக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாகவும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கனித்து, மாநிலத்தின் வளர்ச்சியை தடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக மோடி அரசு உயர்த்தியுள்ளது. ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. இது 100 சதவீதம் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டம் என்றாலும், இதை செயல்படுத்துவது மாநில அரசுகள்தான். தமிழகம் போன்ற மாநிலங்களில் 100 நாள் வேலைதிட்டத்தில் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதால்தான், மாநில அரசின் நிதிப் பங்களிப்பு இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தம் இந்திய தொழில்துறையில் குறிப்பாக சிறு, நடுத்தர தொழில் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் பெரும் பயனடையப் போகும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், வெற்று அரசியலுக்காக இதை திமுக எதிர்க்கிறது. மக்களிடம் எதிர்மறை சிந்தனையை விதைக்கிறது.

 

*மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு என்பது, 2004 முதல் 2014 வரை திமுக அங்கும் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு 1998 முதல் 2004 வரை இருந்த வாஜ்பாய் ஆட்சியும், 2014 முதல் 12 ஆண்டுகளாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியும்தான் காரணம். வாஜ்பாய் துவங்கிய தரமணி டைடல் பார்க் தான் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. சென்னையைச் சுற்றிலும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், மின்னணு தொழிற்சாலைகள் வந்ததற்கு வாஜ்பாய்தான் காரணம்.*

 

பாஜக ஆட்சியின் தங்க நாற்கர சாலைச் திட்டம் இல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சி எப்படி சாத்தியமாகி இருக்கும்? சென்னையின் அடையாளமான கிண்டி மேம்பாலம் வாஜ்பாயின் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின்கீழ்தான் அமைக்கப்பட்டது. எனவே, பாஜக ஆட்சியின் திட்டங்கள் கண்முன்னே இருக்கும்போது, மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதுவும் தரவில்லை என, பொய்யை திரும்ப திரும்பக் கூறி, அதனை உண்மை என்பது போல கட்டமைக்க திமுக முயற்சிக்கிறது.

 

*மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது எனக்கூறும் திமுக, கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வழங்கியது, 1998 முதல் 2004 வரையும், 2014 முதல் இப்போது வரையும் வாஜ்பாய், நரேந்திர மோடி ஆட்சியில் எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது துறை வாரியாக வெளியிட வேண்டும். 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வழங்கிய நிதியைவிட, கடந்த 11 ஆண்டுகளில் 10 மடங்கு அதிக நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது.*

 

பாஜக அரசின் ஜல்ஜீவன் மிஷன், கழிப்பறை திட்டம், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் வாயிலாகவ தமிழக கிராமங்களில் அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளன. 2019 ஆகஸ்ட் 15ம் தேதி கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

 

அப்போது தமிழகத்தில் 21 லட்சத்து 76 ஆயிரத்து 71 வீடுகள் அதாவது 17.37 சதவீத வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. ஆனால், மோடியின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சத்து 36 ஆயிரத்து 555 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

*ஆனால், மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை கோயபல்ஸ் பிரசாரத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் செய்து வருகின்றன. இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.*

 

ஏ.என்.எஸ்.பிரசாத்

செய்தி தொடர்பாளர்

தமிழக பாஜக

 

bjpModitamil naduTamil newsTN BJP
Comments (0)
Add Comment