*சமூக அக்கறை கொண்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் அடுத்த சிங்கப் பெண் என சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவிக்கின்றன*
சென்னை போரூரில் இருந்து முகலிவாக்கம் செல்லும் பேருந்தில் நேற்று மாலை பள்ளி மாணவர்கள் பேருந்து கூரையின் மேல் ஏறியும் தொங்கி கொண்டும் இருந்தபடியே படியில் நின்று கொண்டு ஆபத்தானா முறையில் பயணம் செய்வதை பார்த்த
அப் பெண் ஒருவர் பேருந்து ஓட்டுநரிடம் சென்று வண்டியை நிறுத்த சொல்லி படியில் தொங்கி கொண்டு வந்த பள்ளி மாணவர்களை திட்டியும் அடித்தும் கீழே இறங்க சொல்லி திட்டி அறிவுரை கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் ஒருவர் செல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில்
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்ததும்
இன்று காலை அவரது இல்லத்தில் போலீசார் விசாரணைக்கு காவல் நிலையத்தில் அழைத்து சென்றனர்
பின்னர் பேருந்து நடத்துநர், ஓட்டுநரை பொதுமக்கள் மத்தியில் தகாத வார்த்தைகளாக திட்டிய விவகாரத்திலும் பள்ளி மாணவர்களை அடித்த வழக்கிலும் ரஞ்சனாவை கைது செய்தனர் இருப்பினும்
சமூக வலைத்தளங்களில் பலரும் இப் பெண்ணின் செயலை பாராட்டி வருகின்றனர்
ஆங்காங்கே இருக்கும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டு மனதார பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது