சைரன்- பட விமர்சனம்

ஜெயம் ரவி -கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி

மருமகன் ஜெயம் ரவிக்காக மாமியார் சுஜாதா தயாரித்திருக்கும் படம் சைரன். குறை இல்லாமல் உருவாக்கி இருக்கிறார்.

சைரன் படத் தலைப்பு பொருத்தமான ஒன்று. கதைக்கு ஏற்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டம் டிரைவராக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். அவர் செய்யாத கொலைக்கு தண்டனை அனுபவிக்கும் ஜெயில் கைதியாக வரும் ஜெயம் ரவி நடிப்பு எதிர்பாராத திருப்பம். தன் பிள்ளையே தன்னை கொலைகாரன் என்று சொல்லும் பொழுது கலங்கும் ஜெயம் ரவி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார். பாசப் போராட்டத்தில் கொலைகாரனாக ‌ வித்தியாசம் நடிப்பை ஜெயம் ரவி வழங்கியிருக்கிறார்.

வழக்கமாக தமிழ் சினிமாக்களில் பழிவாங்கல் கதைகள் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இந்த சைரன் படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி ஏன் கொலைகாரன் ஆனான் என்பதை காட்டி, அதற்கான காரணத்தையும் மிக அழகாக திரைக்கதை அமைத்துக் இயக்குனர் கொண்டு போகிறார்.
பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவிக்கும் ஜெயம் ரவி பரோலில் சென்று தனது மகளை பார்த்ததே இல்லை. ஜெயின் சூப்பரண்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பரோலில் வருகிறார். வந்த பிறகு என்ன நடக்கிறது என்பது படு திரில்லிங்காக இருக்கிறது .அதே நேரத்தில் ஒரு குடும்ப பாங்காக திரில்லிங் படத்தை எடுத்து அனைவரும் பார்க்கும் படி இயக்குனர் செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. இந்த படத்தில் ஆபாசமான முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் இன்ஸ்பெக்டராக வருகிறார். அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ப நடப்பதும் பார்ப்பதும் உண்மையான போலீஸையே கண் முன் நிறுத்துகிறார். ஜெயம் ரவி குற்றவாளி என்று அவரது சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்து செல்லும் கீர்த்தி சுரேஷ்,வைஜெயந்தி ஐபிஎஸ் விஜயசாந்தி மாதிரி ஜமாத்திருக்கிறார்.

யோகி பாபு போலீஸ் ஆக வருகிறார். அவர் சிரிப்பு போலீஸ் என்பதை தன் நகைச்சுவை நடிப்பாரல் நிரூபிக்கிறார்.
எஸ் பி யாக படத்தில் வரும் சமுத்திரகனி ஜாதி வெறி பிடித்தவராக இருப்பதை அழகாக தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் நைட் எபெக்ட் காட்சிகளை மிக அருமையாக படமாக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷின் பாடல்கள் வரப்போகும் காட்சிகளுக்கு ஏற்ற படி அமைந்த இசையால் கணக்க வைக்கிறது. சி எஸ் சாம்ஸின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலமாக அமைந்திருக்கிறது.

ஆரம்பக் காட்சிகளில் பரோலில் வரும் ஜெயம் ரவியை அவருடைய தாயார் வரவேற்பதும் அப்போது ஃப்ளாஷ்பேக் சம்பவங்களை ஜெயம் ரவி நினைத்துப் பார்ப்பதும் ரசிகர்கள் மனதில் ஒன்றுவது போல் எடிட் செய்திருக்கும் எடிட்டரை பாராட்டியே ஆக வேண்டும்.
சண்டை இயக்குனரின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அருமை.
சாதிய காதல் காட்சிகள் இழுவை. அதை குறைத்து இருந்தால் படுவேகமாக சைரன் ஒலிக்கும்.

இந்தக் கொலையை யார் செய்திருப்பார் என்று நாம் யோகிக்க முடியாத படி திரைக்கதை அமைத்து திறம்பட இயக்கி உள்ள டைரக்டரை பாராட்டலாம்.
மொத்தத்தில் இந்தப் படத்திற்கு ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள்.
🌟🌟🌟🌟

jayam raviKeerthi Sureshkollywood newsRojatamiltv.comSirenSiren reviewtamil cinema news
Comments (0)
Add Comment