Take a fresh look at your lifestyle.

ஜனநாயகன் படத்திற்கு தடை : பொங்கலுக்கு வெளியாகாது

138

ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இன்று காலை தனி நீதிபதி பிடி ஆஷா படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.உடனடியாக சென்சார் சார்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது .இந்த உத்தரவால் ஜனநாயகன் படம் 9ஆம் தேதி வெளி வராது .

தலைமை நீதிபதி அமர்வு பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞரிடம் சென்சார் வாங்குவதற்கு முன் முன் ஏன் பட வெளியிட்டு தேதியை அறிவித்தீர்கள்? என்றும் ரிலீஸ் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாக நீதிமன்றத்துக்கு ஏன் அழுத்தம் தருகிறார்கள் என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். தணிக்கை வாரிய தலைவருக்கு பதில் தர அவகாசம் தராமலேயே தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியது தவறு என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறி இருக்கிறது. தலைமை நீதிபதி ஸ்ரீவாத்ஸவா, அருள்முருகன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு ஒத்தி வந்துள்ளது..எனவே ஜனவரி 21 வரை ஜனநாயகன் படம் வெளிவர வாய்ப்பு இல்லை