Take a fresh look at your lifestyle.

கோல்ட் கால் சினிமா விமர்சனம்

8

ஐடி அலுவலகம் நிறைந்த பெங்களூரில் மார்கெட்டிங் ரிசர்ச் அண்ட் கம்பெனியில் சேல்ஸ் அதிகாரிகளாக 4 இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள். தினம் தினம் வேலையில் அவர்கள் படும் கஷ்டங்களை நகைச்சுவையாக உருவாக்கி இருக்கிறார்கள். வேலையில் அவமானப் படுகிறார்கள். காதல் போன்ற வழிகளில் கஷ்டங்களை மறக்கிறார்கள். அதோடு அவர்கள் காலம் நகர்கிறது.

அந்த இளைஞர்கள் வேலை பார்க்கும் ஏரியாவில் ஒரு பெரிய தொழிலாளர்களின் மகன் கடத்தப்படுகிறான் ‌இந்த நான்கு கோல்ட் காயின் வேலை பார்க்கும் இளைஞர்கள் தான் கடத்திவிட்டார்கள் என்று அந்தத் தொழில் அதிபர் புகார் கொடுக்கறார். இதனால் இந்த நான்கு பேரையும் போலீஸ் பிடித்து விசாரித்து ரிமாண்ட் செய்து விடுகிறது. அதன் பிறகு அந்த இளைஞர்கள் உண்மையில் கடத்தினார்களா? நிரப்பராதிகளா என்பதை இந்த படம் பார்த்தால் தெரியும்.

இந்த நான்கு கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் காதல் ,நகைச்சுவை, சோகம் என்ற கலக்கி இருக்கிறார்கள்.

கதாநாயகிகள் படத்தில் மூன்று பெண்கள் இளமை சொட்ட சொட்ட நடித்திருக்கிறார்கள். இளைஞர்கள் பார்வை இவர்கள் பக்கம் திரும்பும்.

பிசினஸ்மேன் ,போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர்கள் தங்கள் பாத்திர மருந்து திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பெங்களூர் அழகை அருமையாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

இயக்குனர் தம்பிதுரை கடத்தல் சேல்ஸ் என்று இரண்டையும் ஒன்றாக்கி நகைச்சுவை சோகம் த்ர்லர் ஆகியவற்றை ஒன்று சேர அழகாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

மூன்று பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் இந்த கோல்டு கால் நகைச்சுவையோடு த்ர்லர் கலந்த பொழுதுபோககான படம்.

ரேட்டிங் 3.5/5

்கோல்ட் கால் – நடிகர்கள் & தொழில்நுட்பக் குழு*

 

*நடிகர்கள்* :- சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி.

 

 

 

*தொழில்நுட்பக் குழு* :-

 

எழுத்து & இயக்கம்: தம்பிதுரை

 

ஒளிப்பதிவு : சரவணன்

 

இசை: பிரணவ் கிரிதரன்

 

படத்தொகுப்பு: சுரேஷ் ஆறுமுகம்

 

சண்டைப் பயிற்சி: ஜாகுவார் சன்னப்பா

 

பாடல்கள்: பா. அரவிந்தன், ஆர்மியஸ்

 

வசனம்: பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட்.

 

ஒப்பனை: கவுதம்

 

DI: வேல்ஸ் D ஸ்டுடியோ

 

ஒலி வடிவமைப்பு: Covai Film Studio

 

கலரிஸ்ட்: கார்த்திகேஷ் சுப்புராஜன்

 

ஸ்டில்ஸ் & விளம்பர வடிவமைப்பு: JD

 

விநியோகம்: Action Reaction

 

எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: வரதராஜ்

 

இணை தயாரிப்பு: தம்பிதுரை, சந்தோஷ் குமார்.

 

தயாரிப்பாளர்: கேசவ மூர்த்தி

 

விநியோகஸ்தர்: ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ்.

 

தயாரிப்பு நிறுவனம்: Walkthrough Entertainment

 

PRO: திரு