Take a fresh look at your lifestyle.

115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த.கவிஞர் விவேகா

10

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் கற்றல் பதிப்பகம் சார்பில் தயாரான 115 புத்தகங்களை கவிஞரும், பாடலாசிரியருமான விவேகா வெளியிட்டு, உலக சாதனை படைத்த நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 14-ஆம் தேதியன்று ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளும் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கான பிரத்யேக கலையரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கத்தில் கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும், கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில் கற்றல் பதிப்பகம் பதிப்பித்த 115 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான விவேகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரே தருணத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்,அரபி, பிரஞ்சு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்
115 எழுத்தாளர்களின்
115 நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது இந்த நிகழ்வில் தான் என்றும்… இது ஒரு உலக சாதனை என்றும்.. பன்மொழி அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

12 வயதுக்குள் 5 மொழிகளில் நூல்கள் எழுதிய காதம்பரி என்ற சிறுமியும் மேடையில்
கவுரவிக்கப்பட்டார்!

இந்த நிகழ்வினை தொடர்ந்து நல்வாழ்வு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஷார்ஜாவில் உள்ள இந்திய தூதராக அதிகாரிகளும், உயரதிகாரிகளும், தமிழறிஞர்களும் , தமிழ் ஆர்வலர்களும், புத்தக வாசிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.