Take a fresh look at your lifestyle.

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ளும் ஷங்கரின் மகள்!

194

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்தவர் இவர். தில்லை ராஜன் என்பவரின் நாடக குழுவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பிறகு விஜய் அப்பா எஸ்.ஏ.சியின் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு சென்றுள்ளார் ஷங்கர். அப்போது அவர் ஷங்கரின் திறமையை பார்த்து தன்னிடம் உதவி இயக்குனராக வைத்துக் கொண்டார்.பிறகு ஜெண்டில் மேன் , காதலன், இந்தியன், முதல், ஜீன்ஸ், அந்நியன் போன்ற படங்களின் மூலம் கொண்டாடப்பட்டார் ஷங்கர். பிறகு ஐ என்கிற பிரமாண்ட படம் படு தோல்வியை சந்தித்தது. தற்போது இந்தியன்2 பஞ்சாயத்தில் சிக்கி திணறி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மகள் டாக்டர் அதிதி ஷங்கரின் திருமண செய்தி வந்துள்ளது. நாளை பொள்ளாச்சியில் 100 பேர் மட்டுமே அனுமதியுடன் திருமணம் நடக்க இருக்கிறது.

அதிதி ஷங்கர் திருமணம் செய்துகொள்ள போகிறவர் யார் என்றால், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்.

தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ இயக்குனர் ஷங்கரின் மருமகனின் புகைப்படம்,