Take a fresh look at your lifestyle.

நடிகர் ராஜேஷ் காலமானார்

70

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்.

இன்று காலை 8 மணியளவில் நடிகர் ராஜேஷ்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமார் 8:15 மணியளவில் அவர் காலமானார். வயது 75. அவர் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அவர் மகள் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும் அடக்கம் செய்யப்படும். சென்னை ராமாவரத்தில் வீடு உள்ளது.

இராஜேஷ் , தமிழ் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.திரைப்படங்களில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ள இவர், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.கதாநாயகன் முதல் குணசித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

அவள் ஒரு தொடர்கதை கன்னிப்பருவத்திலே அச்சமில்லை அச்சமில்லை சத்திய விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் ராஜேஷ்

இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக அவர் மரணமடைந்தார்

#justin
Deep condolences.

Actor Rajesh passed away today 8.15am
His daughter is in USA, After reaching chennai funeral wl take place.