Take a fresh look at your lifestyle.

மாயாபஜார் ஹப் உருவாக்கும் தமிழ் திரைப்பட இசைச்சங்கம்

8

*தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட்
மாயா பஜார் ஹப் நிறுவனம்*

தமிழ் திரைப்பட இசை கலைஞரர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.
மாயா பஜார் நிறுவனம்
தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் மாபெரும் வணிக வளாகம் அமைத்து, அதில்
திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்தனர்.
இந்த பத்து மாடி கட்டிடத்தை கட்ட திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் சென்னை ஹைதராபாத் குஜராத் சிங்கப்பூர் மற்றும் துபாய் நகரங்களில் நடத்தி, அதில் வரும் வருமானத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இந்தத் திட்டத்திற்கு அனைத்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் சங்கத்திற்காக இலவசமாக இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி தர முன்வந்துள்ளனர்.
இம்மாபெரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அதற்காக *தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய்* அவர்களிடம் அனுமதி பெற திரை இசை சங்கத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.