Take a fresh look at your lifestyle.

தடைகளை உடைத்து தமிழ்நாடு வாலிபால் சங்க போட்டிகள் தொடக்கம்

306

சென்னையில் மாநில அளவிலான 70 வது சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்…

தமிழ்நாடு வாலிபால் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று முதல் வரும் 16 ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் கூடுதல் காவல் இயக்குநர் சங்கர் ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாம்பியன் கோப்பையை அறிமுகப்படுத்தி போட்டியை தொடங்கிவைத்தார்.

ஆடவர் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணி, இந்தியன் வங்கி, சுங்கவரி அணி, வருமானவரித்துறை அணி என 32 அணிகள் பங்கேற்றுள்ளன.

மகளிர் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி, எஸ்.ஆர்.எம், குயின் மேரிஸ் என 49 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொரோனா, சங்கப்பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மாநில அளவிலான போட்டி மீண்டும் தொடங்கியிருப்பது வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்படவுள்ளது. அத்துடன் தமிழ்நாடு மற்றும் இந்திய அணியில் விளையாடுவதற்கும் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு வாலிபால் சங்க தலைவர் அர்ஜூன் தெரிவித்தார்.