Take a fresh look at your lifestyle.

’ராயர் பரம்பரை’ விமர்சனம்

79

நடிகர்கள் : கிருஷ்ணா, ஆனந்தராஜ், சரண்யா, அன்ஷுல ஜித்தே, கிருத்திகா சிங், கஸ்தூரி, கே.ஆர்.விஜயா, மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், தங்கதுரை, ஷர்மிளா, கல்லூரி வினோத்
இசை : கணேஷ் ராகவேந்திரா
ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு
இயக்கம் : ராமநாத்.டி
தயாரிப்பு : சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் – சின்னசாமி மெளனகுரு

காதலை வெறுக்கும் ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜின் மகளான நாயகி சரண்யாவும், நாயகி கிருஷ்ணாவும் காலிக்கிறார்கள். ஆனால், பெற்றோர் சம்மதம் இல்லாம திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்று முடிவு எடுக்கும் இந்த காத ஜோடி தங்களது காதல் வெற்றி பெற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள், இவர்களுடைய காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘ராயர் பரம்பரை’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் கிருஷ்ணாவுக்கு சரண்யா, கிருத்திகா சிங், அனுஷ்லா ஜித்தேன் என மூன்று பேர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்த மூன்று பேர்களில் அவர் யாரை காதலிக்கிறார் என்பது, காதலுக்கு எதிரியான ஆனந்தராஜ், பெண்ணின் காதலை பிரிக்க என்னவெல்லாம் செய்கிறார், என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், கல்லூரி வினோத், தங்கதுரை, சேசு, கே.ஆர்.விஜயா, கஸ்தூரி என்று படத்தின் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், அவர்களை அளவாக பயன்படுத்தி ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராமநாத்.டி.

படத்தின் முதல் பாகம் சற்று தொய்வாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சூடு பிடிக்கும் காமெடி காட்சிகள் சரவெடியாக வெடித்து தியேட்டரே அதிரும்படி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாகவும், பளிச்சென்றும் இருக்கிறது. கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கல் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

முழுக்க முழுக்க நகைச்சுவையாக திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ராமநாத்.டி, குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு நகைச்சுவை திரைப்படமாக இயக்கியிருக்கும் இந்த ‘ராயர் பரம்பரை’ மக்கள் பார்த்து மகிழவேண்டிய படம்.

ரேட்டிங் 3.5/5