Take a fresh look at your lifestyle.

24 வயது பெண்ணுடன் லிவிங் டுகெதர் தான்-பப்லு விளக்கம்

147

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழியில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சீரியலில் பிஸியாக நடித்து வரும் பப்லு சமீபத்தில் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, என்னை ஆரோக்கியமாக கவனித்து கொள்வது என் மனைவி தான் என, தன் அருகில் இருந்த இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். 24 வயதே ஆன அந்த பெண்ணை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து நெட்டிசன்கள் பலர் இந்த வயதில் திருமணம் தேவையா? பல்வேறு கமெண்டுகள் பரவியது.

லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பப்லு, சினிமாக்காரர்களுக்கு என்று தனியாக வாழ்க்கை இருக்காதே, நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பல சேனல்களில் செய்திகள் வந்துள்ளது. உண்மையில் நாங்கள் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம்.

எங்கே போனாலும் நானும் அவளும் சேர்த்து தான் போவோம் அப்போது அனைவரும் யார் யார் என்று கேட்டதால் என் மனைவி என்றேன். உண்மையில் எனக்கும் அவளுக்கும் திருமணம் இன்னும் நடக்கவில்லை. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம். நான் யாருக்கும் எப்போதும் துரோகம் செய்தது இல்லை,அதே போல இந்த பொண்ணுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்றார்.

இதுபெரிய குற்றம் இல்லை
57 வயதில் 24 வயது பெண்னை திருமணம் செய்யலாமா என்று பலர் திட்டுகிறார்கள். நான் கிட்டத்தட்ட 6 வருடமா மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்த்து இருக்கிறேன். பல நாள் தனிமையில் மனவலியோடு இருந்து இருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் ஏற்பட்ட காதலை என்னால் ஒதுக்க முடியவில்லை. யாரும் பண்ணாதை நான் இங்கே செய்யவில்லை. இது பெரிய குற்றமும் இல்லை.

வயது என்பது ஒரு நம்பர் நான் இப்போதும் அழகாகவே இருக்கிறேன். வயதானவனை ஏன் லவ் பண்ணே என்று நானும் அந்த பெண்ணிடம் பல முறை கேட்டு இருக்கிறேன் அதற்கு அவள் உங்களின் வயது எனக்கு தெரியவில்லை, நீங்கள் மட்டும் தான் எனக்கு தெரிகிறீர்கள் என்கிறார். அது மட்டும் இல்லாமல் நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை. இந்த வயதில் தான் காதல் வரவேண்டும் என்பது இல்லை எந்த வயதில் வேண்டுமானாலும் காதல் வரலாம்.

விவாகரத்து செய்துவிட்டேன்
என் முதல் மனைவியிடம் இந்த பெண்னை திருமணம் செய்து கொள்வது பற்றி நான் கூறினேன். அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்றார். ஏற்கனவே 6 வருடங்கள் பிரிந்து இருந்ததால் ஒரு மாதத்திலேயே டைவர்ஸ் கிடைத்து விட்டது. “மனைவியை விட்டு பிரிந்தாலும், என் மகனுடன் இப்போது நான் எப்படி இருக்கிறேனோ அதே போலவே இருப்பேன்..அதில் எந்த மாற்றமும் இல்லை.”என்றார்.