ரஜினி கமல் விஜய் அஜித் செய்யாததை செய்து காட்டிய உதயநிதி! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி நிதி
உதயநிதி ஸ்டாலின் சொந்த பணத்தில் ஒரு கோடி நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி கொடுத்தார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உயர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
#NadigarSangam #siaa