Take a fresh look at your lifestyle.

வால்டர் விமர்சனம்

322

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், சமூகத்தில் பெரிய ஆளாக இருப்பவருக்கும் இடையேயான கதை தான் வால்டர். கும்போகணத்தில் நடக்கும் போராட்டம் ஒன்றில் வன்முறை ஏற்பட கூலாக ஹீரோ வால்டருக்கு அறிமுக காட்சி வைத்துள்ளனர்.

கும்பகோணத்தில் வேலை பார்க்கும் வால்டருக்கு ஹீரோயின் ஷிரின் மீது காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே அரசியல்வாதியான சமுத்திரக்கனியை போலீஸ் படை என்கவுண்டர் செய்கிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். வீடு திரும்பும் குழந்தைகள் ஒவ்வொன்றாக திடீர், திடீர் என்று இறக்கின்றது.

இது குறித்து விசாரணை நடத்தும் சிபிராஜ் மீது சமுத்திரக்கனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் விபத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த விபத்தை ஏற்படச் செய்ததே நட்டி தான். குழந்தைகள் கடத்தப்பட்டதற்கு பின்னால் இருப்பதும் நட்டியே.

சிபிராஜ் நட்டியை கண்டுபிடித்தாரா, குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள், வீடு திரும்பிய குழந்தைகள் ஏன் இறந்தன என்பது தான் கதை.

இயக்குநர் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். அதனால் வால்டர் நம் பொறுமையை சோதிக்கிறார். ஒரு மெடிக்கல் த்ரில்லருக்கு உண்டான அம்சங்கள் வால்டரில் இல்லை. சிபிராஜ் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் அது மட்டும் படத்தை தூக்கி நிறுத்த போதவில்லை. ஹீரோயின் பெயருக்கு இருக்கிறார். மொத்தத்தில் வால்டர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.