Take a fresh look at your lifestyle.

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி: குவியும் பாராட்டு

583

இந்தியாவில் கொரேனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. இதனால் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகரிகள் இரவு-பகலாக பாடுபட்டு வருகிறார்கள். உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சவுமியா பாண்டே துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் 6 மாத காலம் வரை பேறுகால விடுப்பு எடுக்கலாம்.

ஆனால் சவுமியா பாண்டே 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார். தனது கைக்குழந்தையுடன் பணிபுரிந்து வருகிறார். மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற இவரின் உயர்ந்த எண்ணத்தைக் கண்டு மக்கள் பாராட்டி வருகின்றனர்.