ஆம்னி பஸ்சில் நடந்த ஒரு கொலையை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதுதான் டென் ஹவர்ஸ் படத்தின் கதை.
இரவு 8 மணிக்கு கோயம்பேட்டில் எடுக்கப்படும் பஸ்ஸில் ஏறிய ஒரு பெண் என்ன ஆனால் என்பதை காலை 6 மணிக்குள் அந்த பஸ் நாமக்கல் செல்வதற்குள் யார் கொலை செய்தார் என்பதை கண்டுபிடிக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ்.
நல்ல விறுவிறுப்பான கதை சொல்ல கிடைத்த ஒரு களம். டைரக்டர் பரவாயில்லாமல் அதை பயன்படுத்தி இருக்கிறார். டைரக்டர் உடைய பெயர் இளையராஜா கலியபெருமாள். பெயரை போல் எளிமையாகவும் அதே நேரம் போர் அடிக்காமலும் படத்தை கொண்டு போய் இருப்பதற்காக அவரை பாராட்டலாம். ஆரம்பமும் முடிவும் அமர்க்களமாக இருக்கிறது. இடையே சில தொய்வு. அதை சரி செய்து இருந்தால் படம் டாப் கிளாஸ்.
சிபிராஜுக்கு ஒரு நல்ல படம் கிடைத்தது என்றே சொல்லலாம். அவருடைய பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் படம் பிரமாதம் என்று சொல்ல வைத்திருக்கும். பல இடங்களில் சம்பள பாக்கி உள்ள நடிகர் நடிப்பது போல் நடித்து இருக்கிறார். மூஞ்சி ஏன் அப்படி வைத்துக் கொள்ள வேண்டும். சிபிராஜின் கீழ் உதவி ஆய்வாளராக சுப்புராஜ்,அலட்டல் இல்லாத நடிப்பு.
கதாநாயகி இல்லாமல் அமர்க்களமாக படத்தை டைரக்டர் கொண்டு சென்று இருக்கிறார். சிக்கனமாகவும் அதே நேரத்தில் தனது திறமையால் அது தெரியாத அளவுக்கு இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். இசை அமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி. புதுமுகம் போல் தெரிகிறது, இருந்தாலும் தான் இருப்பதை பல இடங்களில் தன் திறமையை காட்டி இருக்கிறார், கொஞ்சம் இரைச்சலை குறைத்து இருக்கலாம்.
10 ஹவர்ஸ் படத்தில் நீளம், டூ ஹவர்ஸ் .பரவாயில்லை. 10 க்கு 3 மதிப்பெண் தரலாம்…