*ஷாருக்கானின் ‘டங்கி’ படத்தின் கட்அவுட்டுகளுடன் அவரின் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை.. ரசிகர்கள் கொண்டாடினர்..!*
‘டங்கி’ படத்தின் மீதான மோகம் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை பெற்று வரும் தருணத்தில்.. ஷாருக்கின் ரசிகர்கள் அதை சூப்பர் ஸ்டாரிடம் வெளிப்படுத்துவதற்காக.. அவரது வீட்டிற்கு முன் திரண்டனர். இதனை கண்ட ஷாருக்கான், தனது அன்பை பகிர்ந்து கொள்ள அவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட பெரிய கூட்டமொன்று… ஷாருக் கானின் வீடான மன்னத் பகுதியில் ஒன்று திரண்டனர். ஷாருக்கான் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கும், வாழ்த்துவதற்கும் அவர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டங்கியின் வரவேற்புக்கு இடையே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.. தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை பார்த்து கையசைத்து.. பறக்கும் முத்தத்தை வழங்கி.. தனது மாயாஜால வசீகரத்தை வெளிப்படுத்தினார். ‘டங்கி’ திரைப்படத்தின் வெற்றியை… ரசிகர்களும், சூப்பர் ஸ்டாரும் கொண்டாடுவதற்காக ஒன்று கூடினர். ஒவ்வொரு ஆண்டும் ஷாருக் கானின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு முன் திரண்டு வாழ்த்து தெரிவிப்பர். தற்போது ‘டங்கி’ படத்தின் வெற்றி.. ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமாக அமைந்தது.
ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.