தமிழ்நாட்டு ரசிகர்களால் இளைய தளபதி என்றும் தளபதி என்றும் அன்போடு அழைக்கப்பட்ட விஜய் இன்று கட்சி தொடங்கி இருக்கிறார் உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது சில விஷயங்கள் செய்திருக்கிறார் அதாவது அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அனைவருக்கும் உரிமையும் கடமையும் உண்டு தமிழ்நாட்டில் முதல்வராக வந்தவர்கள் ஐந்து பேர் அடுத்ததாக ஸ்டாலினும் வந்திருக்கிறார் ஏழாவதாக உதயநிதி வந்திருக்கிறார் இவர்கள் அனைவரும் அரசியலில் ஊறி திளைத்து வந்தவர்கள் விஜயகாந்த் வந்தார் வாழ்ந்தார் ஆந்திராவில் சிரஞ்சீவி வந்தார் தமிழ்நாட்டில் ராமராஜன் முதல் சரத்குமார் வரை இவர்கள் அனைவரும் வந்தார்கள் ,சென்றார்கள் ,இருக்கிறார்கள். விஜய் வந்தது இப்பொழுது … பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லாமல் . வரும் சட்டமன்றத் தேர்தலில் வரப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.. இதைத்தான் ரஜினிகாந்த்தும் தெரிவித்தார் இனி இனி படத்தில் நடிக்கப் போவதில்லை.. என்று தெரிவித்துள்ளார் ..வாழ்த்துக்கள்!ஆனால் படம் நடித்து வெளியாகும் வரை தான்..இவருக்கு வாய்ப்பு வசதியும்.. பின்னர் வேறு ஒரு நடிகர் வந்துவிட்டால். திரும்பி விடுவார்கள்.! தவிர்த்து விடுவார்கள் !!..ஒவ்வொரு ஊரிலும் கட்சியின் கிளை கழகம்..? அனைத்தும் செலவுகள் இருக்கிறது..! ஒரு தேர்தல் ஒரு மாநாடு நடத்துவதற்கு குறைந்தபட்சம் 1000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது..! தற்போது படத்தில் நடித்து கொண்டிருந்தார்..! முழு சம்பளத்தையும் முன் பணமாக கொடுத்துவிட்டு காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்..? இவரது பிறந்த நாள் ,தகப்பனாரின் திருமணநாள், இவரது திருமண நாள் , என்று செலவு செய்வார்கள்.. ரசிகர்கள் கொடுப்பார்கள்..! ஆனால் நடிப்பதை நிறுத்திவிட்டால் மறந்து விடுவார்கள்..! யாரும் வரமாட்டார்கள் இந்த சமயத்தில் இவர் அரசியல் கட்சியினர் யாரும் இவரை சீண்டுவதற்கு விரும்ப மாட்டார்..! இவர் தனது திறமையும் தனது செல்வாக்கையும் அதில் காட்ட வேண்டும்..! அப்பொழுதுதான்,அரசியல் கட்சிகள் தொழிலதிபர்கள் ,வியாபார நிறுவனங்கள்.. இவருக்கு ஸ்பான்சர் செய்யும்.. அதனை வைத்து பயணிக்க வாய்ப்பு வசதி இருக்கும் என்பதை பின்னர் தான் கவனிக்க முடியும் ..!இப்பொழுது உள்ள நிலையில் இரண்டு வருடம் கழித்துதான் தேர்தலில் போட்டியிட போகிறேன். அதுவும் எம்பி தேர்தலுக்கு அப்புறம் தான் செய்யப் போறேன் என்றால் அது எந்த வகையில் நியாயம்..,? என்று தெரியவில்லை ..!கட்சி ஆரம்பிப்பது வழக்கமாக ஒரு மாநாடு அல்லது அல்லது ஒரு பிரஸ்மீட் போட்டு செய்வது நடைமுறை ஆனால் இவர் யாருடைய அறிவுரையில் செய்கிறாரோ ஒரு நோட்டீஸ் கொடுத்துவிட்டு.. அதன் அடிப்படையில் செய்து கொண்டிருந்தால் எந்த அளவுக்கு வெற்றி என்பது தெரியவில்லை அதனால் இவர் வரப்போகிற காலகட்டங்கலில் ..மக்களை அன்றாடம் சந்திக்க வேண்டும்..? எந்த கோபமும் படாமல் செய்ய வேண்டும்..? திரைப்படத்தின் நடிக்கும் போது கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டு யாரும் சந்திக்காமல் போட்டோ மட்டும் எடுத்து அனுப்பினால் யாரும் இப்பொழுது பின் தொடர தயாராக இல்லை, !ஊரில் மாநிலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட வேண்டும் அல்லது போய் நிற்க வேண்டும் இதை இதுவரை செய்ததாக தெரியவில்லை..! பள்ளியில் படிக்கும் பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்துவிட்டால் போதுமா? மாநிலத்தில் ஏற்படும் எந்த பிரச்சினைகளுக்கும் முன்னே நிற்க வேண்டும் பள்ளியில் படிக்கும் பள்ளியில் படிக்கும் பத்தாவது பதினொன்றாவது பன்னிரண்டாவது மாணவர்களை அதுவும் 235 தொகுதிகளில் உள்ளவர்களை மட்டும் எடுத்துக் கொண்டால் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்பது போகப்போக தான் தெரியும் ஆனால் அதற்கு இவர் அருகே வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் அல்லது அனுபவம் வாய்ந்த தோற்றுவித்த அரசியல்வாதிகள் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்..! இதை செய்தால் அதற்கான ஆலோசனை அறிவுரை வழங்குவார்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் ..