ரபேல் திரைப்படம்.. நமக்கு.. காது குத்த வந்ததா….?நாமம் போட வந்ததா..?.?.? அல்லது நெற்றியில் பட்டையை போட்டு, மொட்டை அடித்து, ரசிகர்களை நிற்க வைப்பதற்காக எடுக்கப்பட்டதா..?என்னதான் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாக கொண்டாலும்..? “திரைப்படம்” என்று வரும் பொழுது அதற்கு ஏற்றார் போல் .. வழங்குவது தானே முறை..! உண்மைக் கதையாக இருக்கும் பட்சத்தில்.. நிறைய செய்திகளை கொடுக்கும் தன்மை இருந்தாலும்.. திரைப்படம் என்பது ஒரு முடிவு சொல்ல வேண்டும்… முடிவே சொல்லாமல் மொத்தத்தில் ஒரே ஒரு டைட்டில் போட்டு ஒரு கிளைமாக்ஸ் முடித்து விட்டார்கள்..?
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கம்யூனிஸ்டுகள் மீது ஒரு அரிப்பு இருக்கலாம்..? அதற்காக ரசிகர்களை வைத்து இவர் அறிப்பை சொரிந்து கொள்வதற்கு முயற்சித்திருக்கிறார்..! புதிய இயக்குனர் என்பதால் அவரை ஞானவேல் ராஜா இயக்கி இருக்கிறார் மொத்தத்தில் அவர் இயக்குனரையும் ஒழித்து.. அவர் தலையில் மண்ணள்ளி போட்டு.. ரசிகர்களையும் குழிதோண்டி புதைத்து இருக்கிறார்..! அதற்காக திரைப்படம் பார்க்கும் அனைவரையும் மண்டை காயவைத்து தலையை பிச்சிக்கிட்டு ஓட வைக்கணுமா என்ன..?
ஒரே ஒரு ஆறுதல் ஜி.வி .பிரகாஷ் நடிகர் என்பதையும் தாண்டி இசையில் விளையாடி இருக்கிறார்
.. அவரின் தந்தையாக நடிக்கும் இயக்குனர் சுப்பிரமணிய சிவா
தொழிலாளர் உரிமையைப் பற்றி பேசுவதுடன்.. கம்யூனிஸ்டுகளின்அடிப்படைத் தத்துவத்தையும் சரியாக விளக்குகிறார்… கம்யூனிஸ்ட் நல்ல கட்சி தான் ஆனால் அதை கையாளுபவர்கள் தவறாக கையாண்டார்கள் என்பதை விளக்குவதற்காக.. “மாப்பிள்ளை அவர்தான்” ஆனா அவரு போட்டிருக்கிற வேஷ்டி சட்டை என்னுடையது இல்லை..அப்படின்னு நான் சொல்ல மாட்டேன் என்று ரஜினிகாந்தின் “முத்து “பட வசனத்தை நினைவூட்டுவது போல் உள்ளது.. !சாப்பிடுவதற்கு சாப்பாட்டை எடுத்து தலையை சுற்றி சாப்பிட முயற்சித்து இருக்கிறார்கள்.. “ஜெய் பீம்” போன்ற திரைப்படத்தை தந்த இந்த நிறுவனம் இதுபோன்று ஏழைகள், எளியோர்கள் பக்கம் நின்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சியை அசிங்கப்படுத்துவதற்கு இந்த திரைப்படத்தை பயன்படுத்தி இருக்க வேண்டாம்..! அதற்காக கம்யூனிஸ்டுகள் ஏழைகளின் தோழன் மனிதரில் புனிதர், புனித அந்தோனியார் என்று வக்காலத்து வாங்க வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்