Take a fresh look at your lifestyle.

தண்ணி காட்டும் மாரீசன் பட தயாரிப்பாளர் – வினியோகஸ்தர்

மீடியாக்கள் வயிற்றில் அடித்த மாரிசன்

102

மாரிசன் படம் நாளை மறுநாள் வெளி வருகிறது.

இந்தப் படத்தில் வடிவேலு பகத் பாஸில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்..  படத்தை ஆர் பி சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருக்கிறார். அவர் சஞ்சய் என்பவரிடம் தமிழ்நாடு உரிமையை விற்றுவிட்டார். சுமார் பத்து கோடிக்கு மேல் சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கு லாபம் கிடைத்திருக்கிறது. சஞ்சய் தமிழ்நாடு விநியோக தியேட்டரிக்கல் உரிமையை பிரதீப் என்பவரிடம் 7 கோடி ரூபாய்க்கு கொடுத்து விட்டார். அது அல்லாமல் டிஜிட்டல் ரைட்ஸ் அது இது என்று பல கோடிகளுக்கு சஞ்சய் விற்று லாபம் பார்த்து விட்டார். பிரதீப், ரெட்ஜெயன்டா மூவிஸ் செண்பக மூர்த்தி மூலமாக தியேட்டர் எடுத்து வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

அதே வேளையில் படத்திற்கு எந்த விளம்பரமும் செய்யாமல் ஆர்பி சௌத்ரியும் சஞ்சயையும் கைவிட்டு விட்டார்கள். ஏற்கனவே மீடியாக்களுக்கு விளம்பரம் தருவதாக மக்கள் தொடர்பாளர் நம்பி,ப்ரமோஷன் செய்து வந்தார். இப்போது பாவம் விளம்பர இல்லை என்றதும் அவர் வம்பில் மாட்டிக் கொண்டார். இதனால் தியேட்டரில் உரிமையை வாங்கியவர் புலம்பி கொண்டிருக்கிறார். எந்த படத்திற்கும்  விளம்பரம் இல்லாமல் மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்று. ஏற்கனவே வடிவேலுவின் இரண்டு மூன்று படங்கள் தோல்வியடைந்த நிலையில் மாரீசனாவது வெற்றி பெறும் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் இப்படி ப்ரோமோசனை கைவிட்ட நிலையில் எப்படி படம் ஓடும் என்று தியேட்டரிக்கல் உரிமை பெற்றவர் புலம்பி கொண்டிருக்கிறார். லாபம் சம்பாதித்த மாரிசன் பட தயாரிப்பாளர்கள் மீடியாக்கள் வயிற்றில் அடிக்கலாமா?