Take a fresh look at your lifestyle.

சூரி வருங்காலத்தில் ஒரு கவனிக்கப்படும் ஹீரோவாகவும்… சந்தானம் இன்னும் சில வருடங்களில் மீண்டும் காமெடியனாகவும் மாறலாம்!

236

காமெடியனாக இருந்த போது ஒரு நாளைக்கு லட்சங்களில் சம்பளம் பார்த்தவர் சந்தானம், விஜய் டிவியிலிருந்து இவரை போல வந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாகி ஹிட்டடித்ததால் ஹீரோ ஆசை சந்தானத்தை இன்னும் துரத்திக்கொண்டே இருக்கிறது. இப்போது சந்தானம் கமர்ஷியல் ஹீரோ ஆக வேண்டுமென்ற ஆசையில் இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காமெடி சண்டை என வேறு ரூட்டைப்பிடித்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஆனால் சூரி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறார். மேலும் சந்தானத்தின் மீது ஒரு தனிப்பட்ட கருத்துள்ளது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்காமல் நிறைய படங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே அவருடைய தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இதன் காரணமாகவே சூரி வருங்காலத்தில் ஒரு கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, அதேபோல் சந்தானம் இன்னும் சில வருடங்களில் மீண்டும் காமெடியனாக மாறினாலும் ஆச்சரியமில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தை கோடம்பாக்கமே எதிர்ப்பார்த்து காத்துக்கிடக்கிறது.