Take a fresh look at your lifestyle.

சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர்- முதலமைச்சர் டுவீட்

859

தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.