HOT SPOT 2 MUCH விமர்சனம்
பிரியா பவானி சங்கர் – ஷில்பா
* பிரிகிடா சாகா – மதுமிதா
* அஷ்வின் குமார் – யுகன்
* ரக்ஷன் – ஜேம்ஸ்
* ஆதித்யா பாஸ்கர் – சத்யா
* விக்னேஷ் கார்த்திக் – முகமது ஷெரிப்
* கே.ஜே. பாலமணிமார்பன் – கே.ஜே. பாலமணிமார்பன்
* பவானி ஸ்ரீ – நித்யா
* சஞ்சனா திவாரி – ஷர்னிதா
* தம்பி ராமையா – பாஸ்கர்
இது ஆந்தாலச்சி வகையான படம்.
ஏற்கனவே இவர் இது மாதிரி படங்களை ஹாட் ஸ்பாட் படத்தை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அதனுடைய இரண்டாம் பாகம் இது. இந்தப் படத்தில் மூன்று சிறுகதைகளை மூன்று எபிசோடுகளாக படமாக்கி இருக்கிறார் ,விக்னேஷ் கார்த்திக் இயக்குனர்.
நடிகனுக்கு ரசிகனாக இரு வெறியனாக இருக்காதே என்பது போன்ற கருத்தை ஒரு கதையிலும் மற்றொன்றில் இளமையும் முதுமையும் மோதுவதையும் பெரிதொன்றில் அரசியல் வாழ்வையும் காட்டியிருக்கிறார்.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித்தியாசத்தை கடைபிடித்து அருமையாக உருவாக்கி இருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா போன்ற அனுபவ நடிகர்களும் இளம் நட்சத்திரங்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
சதீஷ் ரகுநாதனின் இசையும் ஜெகதீஷ ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.இருவரும் அசத்தி இருக்கிறார்கள்.
நமக்கேன் என்று சும்மா இருந்துவிடாமல் உரைக்கின்ற மாதிரி மூன்று விஷயங்களை சொல்லி அசத்தியிருக்கிறார்கள்.
நமது மதிப்பெண்: 4/5