மண்ணையும் பெண்ணையும் தொட்டவனுக்கு தண்டனை நிச்சயம் என்பதை திரௌபதி 2 படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
முஸ்லிம் அரசர்கள் இந்து தமிழ் குறுநில மன்னர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, மதமாற்றம் செய்த ஒரு வரலாற்று சம்பவத்தை வைத்து துணிச்சலாகவும் தைரியமாகவும் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். முஸ்லிம் மன்னர்களின் கொடூரத்தை துணிச்சலாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார். இயக்குனர்.
திரௌபதி படத்தின் ஆவணக் கொலை சம்பவத்தை வைத்து மிரட்டலாக எடுத்த மோகன் ஜி அந்த முதல் பாகத்தில் இருந்து இந்த கதை தொடங்குவது போல் உள்ளது. இந்த தலைமுறைக்கு தெரியாத கச்சிரா பாளையம் குரு நில மன்னர்கள் பற்றி படம் எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டு கூறியது.
வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு கதாநாயகி உடலில் ஏற்படும் அமானுஷ்ய மாற்றங்கள் கடவுள் சக்தியை வெளிப்படுத்துவது போல் இருந்தாலும், அந்த பாத்திரத்தை நடித்த நடிகை பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
இந்து பண்பாடு கலாச்சாரத்தை பிரதிபலிப்பாக இந்த படம் இருப்பது பாராட்டுக்குரியது .
வரலாற்று கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி மிரட்டி இருக்கிறார். அவருடைய உடல்வாகு அந்த காலத்து ராஜாக்களை கண்முன் நிறுத்துகிறது.
கதாநாயகியாக நடித்தவர் மிரட்டி இருக்கிறார்.
ஜிப்ரானின் இசை உண்மையிலேயே படத்திற்கு முதுகெலும்பு. அசத்தியிருக்கிறார் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தையும் அழகையும் ஒருசேர காட்டி இருக்கிறது.
டைரக்டர் தன்னுடைய மதி நுட்பத்தால் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி படத்தை பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார்.
தன்னுடைய பணியை செவ்வனே செய்து தமிழ்நாட்டிற்கும் இந்து மதத்திற்கும் ஒரு பெருமை சேர்த்த டைரக்டர் மோகன் ஜியை பாராட்டிய தீர வேண்டும்.
ஒவ்வொரு இந்துவும் தமிழர்களும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.
இந்தப் படத்திற்கு நமது மதிப்பெண்: 4.5/5
