Take a fresh look at your lifestyle.

‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி

119

கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது.

முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இந்து மக்களின் புனித நகரான காசி நகரத்தின் பின்னணியில் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘பனாரஸ்’ படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து திரைப்பட வெளியீட்டில் வெற்றிகளை குவித்து வரும் இந்நிறுவனம், பான் இந்திய படமான ‘பனாரஸ்’ படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால், இந்த திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுமுக நாயகனாக இருந்தாலும், காதலையும், காசி நகரத்தையும் மாயாஜால புள்ளியில் இயக்குநர் இணைத்திருப்பதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.