Take a fresh look at your lifestyle.

மகாராஜா படம் பார்க்கலாமா விமர்சனம்

370

‘ மகாராஜா ‘ படத்தில் விஜய சேதுபதி எழுந்திருக்கிறார் என்று சொல்வதைவிட துள்ளி எழுந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறப்பான ‘ ட்விஸ்டுகள் ‘ நிறைந்த கதையம்சம் கொண்ட படம். அந்த கேரக்டருக்கு முழுமையாக தன்னை ஒப்படைத்து நடித்திருக்கிறார், வி.சே.,

சில ஹீரோக்கள், மற்ற நடிகர்கள் சில முக்கிய காட்சிகளில் நடித்து பெயர் வாங்குவதை விரும்ப மாட்டார்கள். ஆனால், விஜய சேதுபதி அப்படி அல்ல.. மற்றவர்களையும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த டைரக்டர் நினைத்ததற்கு குறுக்கீடாக இல்லாமல் சக நடிகர்களை பெயர் வாங்கும் படியாக நடிக்க ரசிகனாக இருந்து உதவியிருக்கிறார்.

அனுராக் காஷ்யப், வினோத் சாகர், கல்கி, சிங்கம்புலி- இவர்களுக்கெல்லாம் மிக சிறந்த கேரக்டர்ஸ்..நன்றாக பண்ணியிருக்கிறார்கள்.

பெண்ணை பெற்றவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதம் விரும்புபவர்களும் பார்க்க வேண்டடய படம். விஜய சேதுபதியின் தன்னடக்கமும் அவரை பல படிகள் உயர்த்துகிறது.