*தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை*
*தமிழக அரசு இட்லி கடை திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.*
*தமிழகத்தில் கிராமப்புற மற்றும் அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக இட்லி கடை திரைப்படத்தைக் காணும் வகையில், நடிகர் தனுஷ் மற்றும் திரைப்படம் நிறுவனம் வழிவகை செய்ய வேண்டும்.*
*தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள ‘இட்லி கடை’ தமிழ் திரைப்படம் நம்முடைய சமூக, பண்பாடு, கலாச்சாரத்தின் ஆணி வேராக, நேர்மறை எண்ணங்களை விதைத்து, கலைத்திறன் மிக்க படைப்பாக, குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து வயதினரிடம் அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பாக வெளிவந்துள்ளது.*
*மேலும் தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகளும் போதை கலாச்சாரமும் பாலியல் சீண்டல்களும், ரத்தமும், துப்பாக்கிச் சத்தமும் அதிகரித்து மாணவர்களை இளைஞர்களை சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ‘இட்லி கடை’ திரைப்படம் மனித நேயத்தை சொல்லித் தரும் வாழ்வியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.*
கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தில், . நடிகர்கள் அருண் விஜய், ராஜ் கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
*இந்தியாவின் உயிர்நாடியாக தூண்களாக விளங்கும் கிராமங்களின் ஆன்மீக வாழ்வியல் முறை, விவசாயத்தைத் தாண்டி சிறு,குறு சுயதொழில், நெசவுத்தொழில் உள்ளிட்ட மறைந்து வரும் அற்புத கை வினைஞர்களின் தொழில்களை உயிரோட்டமாகக் கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்களில் உள்ள சுகம், துக்கம் சார்ந்த பிரச்சினைகள், அவர்களின் உறவுகளின் வலிமையான உயிரோட்டமான பாசமான இணைப்பு, ஒற்றுமை மற்றும் மனித நேயத்திற்கு இலக்கணமான அறிவியலைக் கடந்த வாழ்வியல் மூலமாக “இட்லி கடை” திரைப்படம் ஒரு இதமான, சுகமான அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கிறது.*
*நவீன காலத்தை கருத்தில் கொள்ளாமல், ஏற்றுக்கொள்ளாமல் பழமைவாதத்தைப் புகழ்ந்து பேசுகிறது என்று, இயந்திரத்தனமாக “இட்லி கடை” படத்தின் கருவை, கருத்தை, திரைக்காட்சிகளின் உயிரோட்டத்தை, கதாபாத்திரங்களின் எண்ணங்களை புரியாமல், தவறாக சிலர் பேசினாலும், இட்லி கடை திரைப்படம் படம் பார்க்கும் ஒவ்வொரு மாணவனின் இளைஞனை ரசிகனின் மனதில் உள்ள தீய எதிர்மறை எண்ணம் கொண்ட அழுக்குகளை, துவைத்து தூய்மையான சிந்தனையாக மாற்றி, தாய் தந்தை உறவின் புனிதம் குறித்தும், ஆன்மீக, இறை சிந்தனையின் வலிமை குறித்தும் அழுத்தமாக நம்மிடம் பதிய வைத்ததை மறுக்க முடியாது மறைக்க முடியாது.*
நம்முடைய உடலிலும் உயிரிலும் கலந்துள்ள நாம் பிறந்த மண்ணை நேசிக்கும் எண்ணம், ஜாதி மதத்தை கடந்து நம்மைச் சுற்றியுள்ள சொந்தங்கள் உற்றார் உறவினர்களுடன் உள்ள ஆத்மார்த்தமான பந்தம் காப்பாற்றப்பட வேண்டும். அன்பிற்கும் பாசத்திற்கும் உறவுகளுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் நியாயத்திற்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும்
என்பதையும் “இட்லி கடை” திரைப்படம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
படம் முழுக்க கிராமத்து வாழ்க்கை, அமைதியான சூழல், அகிம்சையை அழுத்தமாக மனதில் பதிய வைத்து நகரும் திரை காட்சிகள், அப்பா செஞ்ச தொழிலை, பிடித்து, உணர்வுடன் மகன் செய்றது தவறில்லை. அப்பாவின் தொழிலை கற்றுக்கொண்ட மகன், தன்மானத்துடன் சுய கௌரவத்துடன், தன்னுடைய சுய தொழிலில் உச்சத்தை அடைவதற்கு எதுவுமே தடை இல்லை என்பதையும் எதார்த்த காலத்திற்கு ஏற்றார் போல மிகவும் பாசிட்டிவ் ஆக சொல்லப்பட்டிருக்கிறது.
*இட்லி கடை படத்தில் உள்ள பல நல்ல அருமையான எதார்த்தமான நன்மையை வாழ்வியல் உண்மையை போதிக்கும் வசனங்கள், நம் கண்களை வேண்டுமானால் குளமாக்கலாம். ஆனால், நடைமுறையில் வளர்ச்சி என்ற மீனை அதில் பிடிக்க முடியாது என்று எதிர்மறை வியாக்கியானம் பேசி உச்ச நடிகர்கள் நடிக்கும் வன்முறை, பாலியல், போதை கலாச்சாரம் திருட்டு தொழிலை கற்றுக் கொடுக்கும் படங்களை தூக்கிப் பிடிக்கும் பித்துக்குளித்தனமான சுயநல விமர்சன மனநிலை மாற வேண்டும்.*
*அப்பா செய்த தொழிலை நான் செய்வேன்! எனது மகன் பேரன்களுக்கும் கற்றுத்தருவேன்” என்பது மாதிரியான இட்லி கடை படத்தில் வரும், உணர்ச்சிபூர்வமான யதார்த்த வசனங்களை, கடந்த காலத்தில் மூதறிஞர் ராஜாஜி சொன்னதையும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உருவாக்கிய விஸ்வகர்மா திட்டத்தையும் திசை திருப்பியது போல், தவறாக சித்தரித்து விமர்சனம் செய்யாமல், அவதூறு பரப்பாமல், கதையின் போக்கும், சொல்ல வந்த கதையும் வேறு என்பதை உணர வேண்டும். “இட்லி கடை” திரைப்படம் பல இடங்களில் குலத் தொழிலை ஊக்குவிக்கிறதா? என்று விகல்பமான கேள்விகளை கேட்கும் அறிவிலிகளை ஊக்குவித்து , இட்லி கடை திரைப்படத்தின் உண்மையான கருத்தியல் தாக்கத்தை கொச்சைப்படுத்தக் கூடாது.*
ஊரை, நாட்டை உலகத்தை ஏமாற்றி,
மக்களிடம் கொள்ளையடிக்கும் தொழில் விற்பன்னர்கள் மத்தியில், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் என்ற போர்வையிலே ஏமாற்றி பிழைக்கும் நச்சு மனிதர்களுக்கு மத்தியில், தான் பிறந்த மண்ணின் தங்கள் மூதாதையரின் குலத் தொழிலாக இருந்தாலும், தனக்குத் தெரிந்த, தான் விரும்பி, கற்றுக்கொண்ட தொழிலாக இருப்பதால், நேர்மையுடன் உண்மையுடன் மனசாட்சியுடன் மகிழ்ச்சியுடன் தொழில் செய்து, யாருக்கும் இடையூறு செய்யாமல் துன்பம் விளைவிக்காமல் வெற்றி பெற்று, தானம் வெற்றி பெற்று குடும்பத்தையும் பேணி காப்பவனே நல்ல மனிதன் என்பதை இட்லி கடை திரைப்படம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
*சகிப்புத்தன்மை குறைந்து அழிந்து வரும் இந்த காலத்தில் அகிம்சையை பேசுவதோடு மட்டுமல்லாமல், அன்பால், அகிம்சையால் எதிரியை வெற்றி கொள்ளும் சிறப்பை வெளிப்படுத்தும் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.*
*கிராமங்கள் நகரங்கள் பணக்காரர்கள் ஏழைகள் என்று வேறுபாடு இல்லாமல், கஷ்டப்பட்டு வளர்க்கும் மகன்,மகள்களை அவர்கள் இஷ்டத்திற்கு ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து படிக்க வைத்து அவர் கனவுகளின்நிறைவேற்றும்போது, சுயநலத்துடன் பெற்றவர்களை மறந்து தன்னை உருவாக்கிய தான் பிறந்த மண்ணை மறந்து நாட்டை மறந்து, பணமே பிரதானம் என்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து இளைஞர் சமுதாயத்திற்கு வாழ்க்கையை சொல்லித் தந்த “இட்லி கடை” திரைப்படத்தை மாணவ சமுதாயம் இலையேசம் இளைஞர் சமுதாயம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.*
*இன்றைக்கு வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இளைஞர்கள் விரட்டி அடிக்கப்பட்டு அவமானப்படுத்தும் பொழுது, தன்னுடைய படிப்பை தன்னுடைய திறமையை ஏன் நாட்டுக்காக செலவிடக்கூடாது? சிறிய வருமானமாக இருந்தாலும் பெற்றவருடன் அவர்களை மகிழ்ச்சி படுத்தி நாமும் ஏன் மகிழ்ச்சியாக வாழ கூடாது? என்கிற சிந்தனையை விதைக்கும் வகையில் தன்னோட ‘சொந்த ஊர் நினைவுகளை’ கிராமத்தின் அழகியலை மிக நேர்த்தியாக, கவிதை போலக் காட்டியிருக்கிறது.*
மொத்தத்தில் இந்த இட்லிக்கடை திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் சென்று ரசித்துவிட்டு வரக் கூடிய அளவில் மென்மையாக, பொறுமையாக நல்ல கதை கருவை, மேன்மையான எண்ணங்களை விதைத்திருக்கிறது. குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். இந்த படத்தை பார்க்கும் அனைத்து வயதினரும், அவர்களின் அம்மா அப்பா உள்ளிட்ட பெற்றவர்களை, உற்றார் உறவினர்களை தன்னைச் சுற்றி உள்ள மக்களை நேசித்து, மதித்து வாழும் எண்ணத்தை கற்றுக் கொடுக்கும் வகையில் சின்ன இட்லி கடை பின்னணியை வைத்து, உணர்ச்சிபூர்வமாக, அழுத்தமான சீன்கள், சண்டை வேணாம், எல்லாம் நல்லா இருக்கணும். தொழிலை கடவுளை பார்ப்போம் என்ற என்று படம் முழுவதும் பாசிட்டிவ் காட்சிகளை முன்னிறுத்தி ஒரு காவிய படமாக அமைந்துள்ளது.
*”இட்லி கடை “திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் யு’ (U) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.திரைப்படத்தின் உள்ளடக்கம், அதன் காட்சிகள் போன்றவை தமிழ் பாரம்பரியத்தை கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தமிழ் பண்பாடு மற்றும் சமூகத்திற்கு சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக, மக்களின் மனதில் இருந்து வன்முறையை என்ற பேராபத்தை, விஷ விதையை, கொடிய எண்ணத்தை வேரறுக்கும் வகையில், மனித குலத்திற்கு இன்றியமையாத மருந்தாக, மகாத்மா காந்தி அவர்கள் போதித்த அகிம்சை தத்துவத்தை, மனிதநேய மந்திரத்தை அழுத்தமாக போதிப்பதாலும், கலை ரீதியாகவும், படைப்பாற்றல் மிக்கதாகவும் “இட்லி கடை” திரைப்படம் விளங்குவதால் இத்திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விதிவிலக்கு அளிக்க வேண்டும்.*
*மேலும் தமிழக அரசு நல்ல திரைப்படங்கள் எடுக்கப்படும் பொழுது வரி விலக்கு அளிப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது. நல்ல தமிழ் திரைப்படங்களுக்கு வரி விளக்கு அளித்து மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். யார் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்? என்பதை விட நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டால் அந்தத் திரைப்படத்தை ஆதரிப்பது தமிழக அரசின் மக்களின் கடமை. ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்லும் திரைப்படங்கள் அல்லது ஆளுங்கட்சிக்கு வேண்டிய திரைப்பட நிறுவனங்கள் என்கிற குறுகிய எண்ணத்தை திரைப்படங்களில் செலுத்தக் கூடாது.*
*முதல்வரின் குடும்பத்திற்கு வேண்டிய “சிவப்பு பூதம்” நிறுவனம் “இட்லி கடை” படத்தை தயாரித்து வெளியிட்டு இருப்பதால், “இட்லி கடை” திரைப்படத்திற்கு சலுகைகள் அளித்தால் வரி விலக்கு அளித்தால், அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள் இன்று குற்றம் சாட்டி விடக்கூடும் என்பது போன்ற எதிர்மறை* *சிந்தனைகளுக்கு முடிவு கட்டி, குடும்பங்களுக்கு மகிழ்ச்சியும் நாட்டிற்கு பெருமையும் சேர்க்கக் கூடிய அனைவருக்கும் நல்ல சிந்தனையை அளிக்கக்கூடிய அனைத்து தமிழ் திரைப்படங்களுக்கு பாகுபாடு இல்லாமல் தமிழக அரசு வரி விலக்கு அளித்து பெருமைப்படுத்தி தமிழக மக்கள் காணும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் “இட்லி கடை” திரைப்படத்தைக் காண தமிழக அரசு உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.*
இட்லி கடை படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகனாக நடித்துள்ள தனுஷ், தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வை மையமாக வைத்து
உருவாக்கியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கும் இந்த திரைப்படத்தில் உயிரோட்டமாக நடித்துள்ள ராஜ்கிரன் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் டெக்னீசியன்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைப்பேசி: 9840170721