Take a fresh look at your lifestyle.

நல்லக்கண்ணு மறைவுக்கு டி ஆர் இரங்கல்

105

நல்லகண்ணு மறைவுக்கு,
டி.ராஜேந்தர் இரங்கல்!

அனுபவம் மிக்க, பண்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு ஐயா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. போராளியாய் வாழ்ந்த, பொதுவுடமையின் பொக்கிஷம், எளிமையின் சின்னம், தோழமையின் தூண் சாய்ந்து விட்டது என்ற செய்தி, துயரத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றேன்.

இப்படிக்கு,
திரைப்பட இயக்குனர்,
இலட்சிய திமுக தலைவர்
டி.ராஜேந்தர்

@GovindarajPro