Take a fresh look at your lifestyle.

பிரசாந்த் சபதம்! ஓப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு…

271

ஒரு காலத்தில் காதல் இளவரசன் , டாப் ஸ்டார், வின்னிங் ஸ்டார் என்கிற அடை மொழியோடு வலம் வந்தவர் பிரசாந்த்.தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியான கடைசி பத்து படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.இதனால் இந்த முறை எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது சென்னையில் அந்தகன் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மிகப்பெரிய படமாக இருக்க வேண்டுமென தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் மோகன் ராஜாவை வைத்து படத்தை எடுக்க இருந்தனர்.

ஆனால் தற்போது அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜனே இயக்கி வருகிறார். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என நம்புகிறாராம் பிரசாந்த். அப்படி ஒருவேளை இந்த படம் மட்டும் ஓடவில்லை என்றால் இனி சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன் என்று கூறும் அளவுக்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளாராம் டாப் ஸ்டார் பிரசாந்த்.

தம்பி ஒப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா பினீசிங் சரியில்லையே என்று வின்னர் படத்தில் வடிவேலு பேசும் டயலாக் நினைவிற்கு வருகிறது.