Take a fresh look at your lifestyle.

முற்பகல் செய்த ஷங்கருக்கு பிற்பகல் விளைந்த விளைவு! சிம்புதேவனுக்கு செய்தது ரிப்பீட்டு

307

இந்தியன் 2 படத்தில் முடித்து கொடுத்துவிட்டுதான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என லைகா நிறுவனம் ஷங்கருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் மற்றும் ரண்வீர் சிங் நடிக்கும் அந்நியன் ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்துக்கும் செல்லக் கூடாது என அவருக்கு லைகா நிறுவனம் பிரச்சனைக் கொடுத்து வருகிறது.

இந்தியன் 2 விவகாரத்தில் ஷங்கர் இப்படி பாதிக்கப்பட்டது போலவே இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் சிம்புதேவன் பாதிக்கப்பட்டுள்ளார். அப்படி சிம்புதேவனுக்கு பிரச்சனைக் கொடுப்பவர் வேறு யாரும் இல்லை, ஷங்கர்தான். பாதியில் நின்றதால் பல கோடி நஷ்டம் என சொல்லி வேறு எந்த படத்தையும் இயக்க செல்ல சிம்புதேவனுக்கு ஷங்கர் நெருக்கடி கொடுத்த்தால்தான் சிம்புதேவனால் வேறு எந்த படத்தையும் இயக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.