Take a fresh look at your lifestyle.

2

மராத்தி மொழியில் வெளியாகி ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள கோந்தல் என்கிற திரைப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
இசை அரக்கன் இளையராஜாவின் இசையில் படம் நம்மை அந்த நிகழ்வுக்கு இழுத்துச் செல்கிறது. இந்த இசையை இளையராஜாவால் எப்படி கொடுக்க முடிந்தது என்று நான் யோசித்த பொழுது, அந்த இசையை நேரடியாக பார்த்து- கேட்டு உணர்ந்து அந்த மனிதர் இசையமைத்துள்ளார் என்பதை கேள்விப்பட்டேன். 84 வயது இளைஞனை உச்சி முகர்ந்து பாராட்ட வேண்டும் என்பது போல் எனக்குத் தோன்றியது., ஆச்சரியம் என்னவெனில் திரைப்படத்திற்கு வர வேண்டும் என்று துடிக்கின்ற இளைஞர்களும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று திரையு உலகில் வளர்ந்து கொண்டிருக்கும் நண்பர்களும் இசையமைக்க துடிப்பவர்களும் இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள். அவ்வளவு நேர்த்தியாக ஒரு சாதாரண கிராமத்து திருமண கதையை விறுவிறுப்போடு கொண்டு சென்று ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வித்தை அருமையானது, அந்த படத்தின் கதாநாயகன் கதாநாயகி இருவரையும் படம் விட்டு வரும்போது சந்தித்து பாராட்டினேன். உண்மையிலேயே அவர்கள் அந்த காலத்து 16 வயதினிலே படத்தின் பரட்டை மயிலு போன்று இருந்ததாக என் நினைவுக்கு வந்தது. ஏறக்குறைய இது பாரதிராஜாவின் புதிய வார்ப்பு படத்தின் சாயல் இருந்தாலும் அற்புதமாக உருவாக்கிய கோந்தல் படத்தின் இயக்குனரை பாராட்டுவோம். ஒளிப்பதிவாளரை அதற்கு மேல் பாராட்ட வேண்டும். காட்சிகளை அவ்வளவு தத்ரூபமாக ஒளிப்பதிவு செய்து நம்மை எல்லாம் கதைக்களத்துக்குள் இழுத்துச் செல்கிறார். இது மாதிரி படங்களுக்கு ரசிகர் ஆதரவு உத்தர வேண்டும். நல்ல படம் பார்க்க வேண்டும் என்று தேடல் உள்ளவர்கள் இந்தப் படத்தை கட்டாயம் பாருங்கள்.