Take a fresh look at your lifestyle.

SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் உடன் இணையும் சர்ஜுன் இயக்கத்தில் புதிய படம்

199

கலையரசன் ஜோடியாக மிர்னா

 

பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்த SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்

மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.

 

மா, லட்சுமி உள்ளிட்ட பல சர்ச்சைக்குறிய குறும்படங்களையும், நயன்தாரா நடித்த ஐரா படத்தையும் இயக்கிய சர்ஜுன் இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

 

கலையரசன் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக மிர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் முன்னனி நடிக நடிகையனர் பலர் நடிக்கின்றனர்.

 

ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேருகிறது. அந்த சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்து போகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான, இதுவரை சொல்லப்படாத பின்னணியில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

திரைக்கதை: அனுசுயா வாசுதேவன்

ஒளிப்பதிவு: பாலமுருகன்

பாடல்கள்: யுகபாரதி

இசை: R சிவாத்மிகா

கலை: மதன்

எடிட்டிங்: பிரவீன்

உடைகள் வடிவமைப்பு: மீனாட்சி ஸ்ரீதரன்

மக்கள் தொடர்பு:நிகல் முருகன்

தயாரிப்பு நிர்வாகம்: தண்டபாணி

நிர்வாக தயாரிப்பு: துர்கேஷ்

இணை தயாரிப்பு: சாரா மோகன்,

தினகர் பாபு

 

தயாரிப்பு: E மோகன்

கதை, இயக்கம்: சர்ஜுன்