Take a fresh look at your lifestyle.

இதயத்தை அதிரச் செய்யும், புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘3:33’ – டிசம்பர் 10 முதல் திரையரங்குகளில்!

489

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’. முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில், டைமை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு வீட்டின் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் தொழில்நுட்ப குழு விவரம்
எழுத்து & இயக்கம் – நம்பிக்கை சந்துரு
ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன்
இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
படத்தொகுப்பு – தீபக் S. துவாரகநாத்
VFX சூப்பரவைசர் – அருண்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்
மிக்சிங் – ராம்ஜி சோமா
SFX – A. சதீஷ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )
விளம்பர வடிவமைப்பு – SABA DESIGNS

வித்தியாசமான கதையில், மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள திரைப்படம், டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.