Take a fresh look at your lifestyle.

நடிகை த்ரிஷா காங்கிரஸில் சேருவாரா?

காங்கிரசுக்கு இதனால் நல்லது நடக்குமா?

372

நடிகை த்ரிஷா காங்கிரஸில் சேரப்போவதாக தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே, தனுஷுடன் ‘கொடி’ படத்தில் அரசியல்வாதியாக போட்டா போட்டிக்கொண்டு நடித்த த்ரிஷா உண்மையிலேயே அரசியல் களத்தில் என்ட்ரி ஆகிறாரா அல்லது வெறும் வதந்தியா…. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்ன சொல்கிறார், பாருங்கள்:

“யார் யாரோ த்ரிஷா காங்கிரஸில் இணையப்போகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியில் அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இந்தத் தகவல் உண்மையா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், த்ரிஷா வருவதால் காங்கிரஸ் கட்சிக்கு பயனோ பலமோ உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் பெரிய தாக்கமும் ஏற்படாது. காங்கிரஸ் மதசார்பற்றக் கட்சி. அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கட்சி. அதனால், மதசார்பின்மையையும் காங்கிரஸ் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு த்ரிஷா வந்தால் வரவேற்போம். இக்கொள்கைகளுடன் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்”.