







பாலிமர் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீ விஹானிகா தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.1லட்சம் நிதி
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.1லட்சம் நிதி உதவி
*பாலிமர் டிவி செய்தி வாசிப்பாளர் ஸ்ரீ விஹானிகா அவர்கள் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.1லட்சம் அனுப்பி உள்ளார். சிரமப்படும் செய்தி வாசிப்பாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவித் தொகைக்காக… ஆண்டுதோறும் தமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அவர் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி இருக்கிறார். எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. இந்த வருவாயை அவர் ஈட்டுவதற்கு குறைந்தபட்சம் 100 முதல் 150 bulletin படிக்க வேண்டும்.. அதாவது ஆறு மாதம் அவருடைய உழைப்பை நமது சங்கத்திற்கு அளித்துள்ளார். இந்தத் தொகை பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டு அதன் மூலம் ஆண்டு தோறும் கிடைக்கும் பணத்தை கல்வி உதவித் தொகைக்காக வழங்கப்படும். ஸ்ரீ விஹானிகா அவர்களை தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் பாராட்டுகிறது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது- என்று செல்வராஜ் pk தெரிவித்துள்ளார்.அவரை நாம் வாழ்த்துவோம்.