Take a fresh look at your lifestyle.

விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

140

உலகளவில் வெற்றியைப் பெற்றிருக்கும் அசலான தமிழ் தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸைப் பார்வையிட்ட பார்வையாளர்களும், ரசிகர்களும், இணையவாசிகளும், விமர்சகர்களும் பாராட்டி வருகிறார்கள். நீண்ட வடிவிலான முதல் தமிழ் வலைத்தள தொடருக்கு உலகளாவிய அளவில் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர், ஜூன் 17ஆம் தேதியன்று வெளியானது. ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’, புஷ்கர் & காயத்ரி இணைகளின் திரை படைப்புகளில் ஆக சிறந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை. புலனாய்வு விசாரணை பாணியிலான இந்த திகில் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட தொடராகும். இது முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. மாயாஜாலம் நிகழ்த்தும் படைப்பாளி தம்பதிகளான புஷ்கர் & காயத்ரி, அவர்கள் உருவாக்கிய கண்கவர் டிஜிட்டல் உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச்சென்ற முதல் நீண்ட வடிவிலான அசல் தமிழ் தொடராகும்.

இந்த தொடரின் வெற்றி, சர்வதேச அளவில் இந்திய பிராந்திய கதைகளுக்கான இடத்தையும், முக்கியத்துவத்தையும் தெரிவித்திருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ வின் முதன் முதலான நீண்டகால வடிவிலான உலகளாவிய தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை விமர்சகர்களும், பார்வையாளர்களும் பாராட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக மிகவும் கவர்ச்சிகரமான தொடராகவும், ஒரிஜினல் தொடராகவும், ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர் இருக்கிறது. மேலும் இந்தத் தொடர் இதுவரை பார்க்க இயலாத ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய தொடரவும் இருக்கிறது. இணையவாசிகள் பலரும் இந்தத் தொடர், எங்களை இருக்கையின் நுனிக்கு அழைத்து வந்த சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் தொடர் மட்டுமல்ல எங்களை கவர்ந்த தொடரும் கூட என்று பாராட்டியிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ஆர் பார்த்திபன் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் குழுவுடன், அனுசரண் .எம் மற்றும் பிரம்மா இயக்கிய ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர் சமகாலத்தில் வெளியான சிறந்த திரில்லர் படைப்புகளில் ஒன்று. இந்த தொடரின் காட்சிகள் அனைத்தும் ஓவியத்தைப் போல் நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரின் அனைத்து அத்தியாயங்களும் கதையோட்டத்திற்கான ஒளியை சரியாக வழங்கியிருக்கிறது. ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ உலகம் முழுவதிலும் உள்ள மிக நீண்ட வடிவிலான வலைதள தொடர்களில் ஒன்றாகும். மேலும் இந்தத் தொடர் இந்தியாவிலிருந்து வெளியான சிறந்த கதைகளில் ஒன்றாகவும் இடம்பிடித்திருக்கிறது. புஷ்கர் & காயத்ரி அவர்களின் டிஜிட்டல் பட்டறையிலிருந்து வெளியான தவிர்க்கமுடியாத சிறந்த கதை இது.

இந்தத் தொடர் தற்போது வெளியாகியிருப்பதால் இணையவாசிகள் பலரும் இந்த சுழலின் வசீகரத்தில் சிக்கி, அதிகளவில் அதனை பார்வையிட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் தங்களது எண்ணத்தையும் கருத்தினையும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை காண்போம்.

நடிகர் சாந்தனு தன்னுடைய டிவிட்டரில், ” சுழல் தி வோர்டெக்ஸ் தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை பார்த்தேன்.. பரபரப்பாக இருந்தது.. ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகர்களின் நடிப்பு அற்புதமாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்தது. முகேஷின் ஒளிப்பதிவு அபாரம். சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை தரமாக இருந்தது. புஷ்கர் & காயத்ரி அவர்களின் திரை எழுத்து நேர்த்தியாக இருந்தது. மீதமுள்ள நான்கு அத்தியாயங்களையும் காணவேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது. ” என பதிவிட்டிருக்கிறார்.

” இந்திய வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத மிகவும் தீவிரமான கதையம்சம் கொண்ட தொடர் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கோபிகா ரமேஷ், கதிர், பார்த்திபன், பிரடெரிக் ஜான் போன்ற நடிகர்களின் அற்புதமான நடிப்பும், சாம் சி எஸ் அவர்களின் அற்புதமான பின்னணி இசையுடன், புஷ்கர் & காயத்ரி உருவாக்கியிருக்கும் இந்த தொடரை அவசியம் அனைவரும் அமேசான் பிரைம் வீடியோவில் கண்டு களிக்க வேண்டும். ”.

” நேற்று அமேசான் பிரைம் வீடியோவில் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை பார்த்தேன். அனைத்து அத்தியாயங்களையும் சேர்த்து மொத்தமாக ஆறு மணி நேரம் முப்பது நிமிடம் கொண்ட தொடர். திரைக்கதையும் திருப்பங்களும் சுவராசியமாக அமைந்திருந்தது. நடிகர்கள் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள் குறிப்பாக இந்த தொடரின் கதை திரைக்கதை எழுதிய புஷ்கர் & காயத்ரி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

” சுழல் =தி வோர்டெக்ஸ் தொடரை பார்த்தேன்.. தொடர் முழுவதும் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக அமைந்திருந்தது.. கடைசி அத்தியாயம் வரை உணர்வுபூர்வமான ஒரு விசயத்துடன் த்ரில்லர் அம்சங்களுடன் நிர்வகித்திருப்பது பிடித்திருந்தது. எப்போதும் போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் நடிகர் கதிர் தன்னுடைய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். பாராட்டுக்கள்.”

” சுழல் =தி வோர்டெக்ஸ் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புலனாய்வு திரில்லர் தொடர். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவராசியமான முடிச்சுகள். எதிர்பாராத திருப்பங்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு. அவர்களின் அற்புதமான நடிப்பு. தரமான பின்னணி இசை. சில இடங்களில் தொய்வு இருந்தாலும் பரபரப்பு இருக்கிறது. சில கசப்பான வார்த்தைகள் வசனங்களில் இருந்தாலும் ஆறு மணி நேரம் 15 நிமிடம் வரை நீடிக்கும் இந்த தொடரை குடும்பத்துடன் எட்டு அத்தியாயத்தையும் காணலாம்.”

” சுழல் =தி வோர்டெக்ஸ் தொடர் மூலம் புஷ்கர் & காயத்ரி பரபரப்பான திரில்லர் தொடரை வழங்கியிருக்கிறார்கள். முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் தங்களுடைய அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். தமிழில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய வலைதள தொடர்களை உருவாக்க இயலும் என்பதால் புஷ்கர் & காயத்ரி போன்ற படைப்பாளிகள் படைப்பாளிகளிடமிருந்து மேலும் இது போன்ற தொடர்களை அதிகளவில் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன்.”

” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடர் புஷ்கர் & காயத்ரி போன்ற படைப்பாளிகள் ஆழமாக சிந்தித்து, சுவராசியமான திருப்பங்களுடன் துணிச்சலான திரைக்கதையை வழங்கியதற்கு நன்றி. சாம் சி எஸ் அவர்களின் இசை இந்த தொடரை மேலும் தரமான தொடராகவும், அனைவரும் கண்டு ரசிக்கும் தொடராகவும் அமைந்திருக்கிறது இதற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.”

என இணையவாசிகள் தங்களின் பின்னூட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசித்து நேர்மறையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.