Take a fresh look at your lifestyle.

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

148

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் சுவராசியங்களை வெளியிடவேண்டாம் என்றும், இந்த தொடரின் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு பார்வையாளர்களும் பிரத்யேகமாக பார்த்து ரசிக்க அனுமதிக்க வேண்டும் என இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான புஷ்கர் & காயத்ரி அவர்களின் பட்டறையிலிருந்து தயாராகி, அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. க்ரைம் த்ரில்லர் பாணியிலான புலனாய்வு தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, அனைவரது பட்டியலிலும் இது இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவராசியமான முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருப்பதால் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் இந்த தொடரில் இடம்பெற்ற திடுக்கிட வைக்கும் சுவராசியமான திருப்பங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஏனெனில் தொடரின் ஒவ்வொரு திருப்பங்களையும், அவர்களே ஆழமாக உற்றுப்பார்க்கும் போது அவர்களது எதிர்பார்ப்பும், ஊகங்களும் கூட தவறாக போகலாம்.

மேலும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரைப் பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகையில், ” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எதிர்பாராத வகையில் திருப்பங்கள் இருக்கிறது. திருப்பத்திற்குரிய தடயங்கள் இருந்தாலும், அவை பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. ஆனால் இறுதி அத்தியாயத்திற்கல்ல. நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் திருப்பங்களை ஊகித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டாம். நீங்கள் அனுபவித்த கலை இன்பத்தை மற்றவர்களும் உணர அனுமதிக்கவேண்டும். இந்த தொடர் தரும் ஆச்சரியத்துடன் கூடிய திருப்பங்களை, ஒவ்வொருவரும் பார்க்கும் போது, அவர்களே கண்டுபிடித்து ரசிக்கும் வகையில் மகிழ்ச்சியை பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” என்றனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடர் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது. ஓ. டி. டி. எனும் டிஜிட்டல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த தொடர்- சிறந்த புலனாய்வு பாணியிலான திரில்லர் தொடர். 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 30க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடரை பார்க்கலாம்.