Take a fresh look at your lifestyle.

மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்

141

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை விழாவில் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னை மாநகரிலுள்ள மகளிர் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்வேறு பெயரில் கலைவிழாக்கள் நடைபெறுவது இயல்பு. இவ்விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு, மாணவிகளை உற்சாகப்படுத்துவதும் இயல்பு. மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க எம் ஓ பி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்ற ‘விஷ் 22’ என்ற கலைவிழாவில் இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் மாணவிகளின் குறும்புத்தனமான கேள்விகளுக்கு துருவ் விக்ரம் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அத்துடன் அவர் எழுதி பாடிய ‘மனசே..’ என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலையும் பாடினார். பிறகு நடனமாடி, விழாவை கொண்டாட்டமாக மாற்றினார். நிறைவாக மாணவிகளுடன் தன்னைப்பற்றியும், தன்னுடைய தந்தையான சீயான் விக்ரம் பற்றியும் பல நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டார்.