Take a fresh look at your lifestyle.

#BoyapatiRAPO படத்தின் தலைப்பு ‘ஸ்கந்தா’ என அறிவிக்கப்பட்டு டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!

90

இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் #BoyapatiRAPO படத்தின் தலைப்பு ‘ஸ்கந்தா- தி அட்ராக்கர்’ என அறிவிக்கப்பட்டு இதன் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி இணைந்துள்ள அதிகம் எதிர்பார்க்கப்படும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படமான #BoyapatiRAPO படத்தின் தலைப்பு ’ஸ்கந்தா’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்கந்தா’ என்பது சுப்ரமணிய ஸ்வாமி தெய்வத்தின் மற்றொரு பெயர் எனவும், ‘தி அட்ராக்கர்’ என்ற டேக் லைன் கதாநாயகனது மூர்க்கமான குணத்தையும் குறிப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த டைட்டில் லோகோவில் கடவுள் கார்த்திகேயனின் ஆயுதமான வேலும் இணைத்துள்ளனர்.

இந்த டைட்டில் கிளிம்ப்ஸில் நடிகர் ராம் மிகவும் மூர்க்கமாக கோவிலின் குளத்தில் இருந்து எழுந்து, ‘நீங்கள் வந்திருப்பது வீண். என் நுழைவு உங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்’ எனப் பேசிக் கொண்டே எதிரில் இருப்பவர்களை தாக்கும் வகையிலான மாஸ் சண்டைக்காட்சி இதில் காணப்படுகிறது. ஸ்டன்ட் சிவா படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். தமனின் இசை இந்த கிளிம்ஸூக்கு மேலும் மாஸ் கூட்டும் வகையில் அமைந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் ராமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் சிறந்த தொழில்நுட்ப தரங்களுடன் மிகப் பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் ’ஸ்கந்தா’ திரைப்படம் வெளியாக உள்ளது.