Take a fresh look at your lifestyle.

அனிமல் படத்தின் புதிய போஸ்டரில் பாபி தியோல் அனல் பறக்கும் வில்லனாக, அதிரடி காட்டுகிறார்

74

பாபி தியோல் அனிமல் படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஒரே நேரத்தில் அடர் அமைதியுடனும், இன்னொரு புறம் அவர் பற்றி எரியும் நெருப்பாகும் விளங்கும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார். புதிய போஸ்டரில் பாபி தியோலின் கடுமையான ஆளுமைமிக்க தோற்றம், அவரை படத்தின் கதாநாயகனுக்கு ஒரு வலிமையான எதிரியாக சித்தரிக்கிறது. அவரின் மிரட்டலான தோற்றமும் தீவிரத்தன்மையும், பூஷன் குமாரின் “அனிமல்” படத்திற்கான பரப்பரப்பையும் ஆவலையும் உயர்த்துகிறது. இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களின் நினைவில் நீங்காத இடம் பிடிக்கும்.