







*”இயக்குநர் சிகரம்” அவர்களின்”8-ஆம் ஆண்டு நினைவு தினம், டிசம்பர் 23-ம் தேதியை முன்னிட்டு நேற்று, சென்னையில், “வளசரவாக்கத்தில் அமைந்துள்ள
“அக்க்ஷையா முதியோர் இல்லத்தில்,
“கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவர்,
“எம்.ஜி.ஆர். திரைப்படக் கலை கல்லூரியின் தலைவருமான,நடிகர், கலைமாமணி,
திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில்,
கவிதாலயா வீ.பாபு,
கவிதாலயா.பி.பழனி இவர்களின் மேற்பார்வையில், மரியாதைக்குரிய, அமரர்,ஐயா, திரு.கே.பாலசந்தர் அவர்களின் திருவுருவ புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி, அமைதியான முறையில்
“நினைவு அஞ்சலி நடைப்பெற்றது.மேலும், “அக்க்ஷையா முதியோர் இல்லத்தில் இருக்கும் 50-கு மேற்பட்டோருக்கு, மதியம் உணவு வழங்கப்பட்டு, *கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பெயரில்,”காசோலை மூலமாக ரூ.5,000/-தை “அக்க்ஷையா முதியோர் இல்லத்தின் நிர்வாகியிடம் கொடுக்கப்பட்டது. இதில் கலந்துக் கொண்டு மலர் தூவி,மரியாதை செலுத்தியவர்கள், நடிகர்,டாக்டர்,திரு.தாமு,சித்த மருத்துவர், திருமதி.மகேஷ்வரி,
திருமதி.சுபா வெங்கட் ,
திரு.தாசரதி(நடிகர்),
திரு.முகமது இலியாஸ் (பொருளாளர்),
திரு.தேனீ செல்வம்,(புகைப்பட கலைஞர், செயற்குழு உறுப்பினர்),
திரு.பூவிலங்கு மோகன் (நடிகர்,கலைமாமணி, டாக்டர்,கே.பா.ர.சங்க செயற்குழு உறுப்பினர்),
திரு.கண்ணப்பன்
(ஒளிப்பதிவாளர்,கே.பா.ர.சங்க
இணைச்செயலாளர்),
திரு.அணில்,(உதவி ஒளிப்பதிவாளர்), மற்றும் பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.🤝🤝🤝🤝🤝