அஜித்தின் நண்பரும் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றியை காணவில்லை
அஜித்தின் நண்பரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார் இமயமலையில் விபத்தில் சிக்கியது
அஜித்தின் நண்பரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார் இமயமலையில் விபத்தில் சிக்கியது.
இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதிக்கரையின் மேல் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தன்னுடைய மைத்துனர் திருப்பூர் கோபிநாத் உடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து இருக்கிறது. இதில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. அவருடன் சென்ற அந்த திருப்பூர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சோ, வெற்றியை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி அஜித் உடன் சேர்ந்து கார் ரேஸ் ட்ரக்கிங் செல்வது அவருடைய ஹாபி பறவைகள் வளர்ப்பது மிருகங்களை வளர்ப்பதும் அவருடைய ஹாபி. அந்த விதத்தில் அவர் இமயமலைக்கு இமாச்சலப் பிரதேசத்தில் ட்ரக்கிங் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி கோடம்பாக்கம் வட்டாரத்தில் பிரபலமானவர். இவர் சினிமா திரைப்படங்களுக்கும் பைனான்ஸ் செய்திருக்கிறார்.
சைதை துரைசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.