சைதை துரைசாமி மகன் வெற்றி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லாவுக்கு சுற்றுலா சென்றார். அவர் சென்ற கார் வழியில் விபத்தில் சட்லஜ் நதியில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உயிரிழந்தார்.உடன் சென்ற நண்பர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டார். இந்த விபத்தில் வெற்றியை மட்டும் காணவில்லை.இரண்டு நாட்களாக அவரை தேடும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அவரை கண்டு பிடித்து கொடுப்போருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளதாக கூறப் படுகிறது.